பக்கம்:மன ஊஞ்சல்.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 மன ஊஞ்சல் வந்துவிடப் போவதில்லை; மகிழ்ச்சியே உண்டாகும். நாளடைவில், அவர் நல்ல குணங்கள் உன்னைத் தன் வயப் படுத்திவிடும். ஆனால், இதை நீ மறுத்தால், இரண்டு பேருடைய துன்பத்திற்குக் காரணமாவாய். தங்கம், உன்னை யடையாவிட்டால் அவர் இன்பம் காணப்போவதில்லை. அவர் துயரப்பட்டால் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது!’ என்றுமீண்டும்.ராதாதங்கத்தை வற்புறுத்தினாள். தங்கம் பேசாமலிருந்தாள். என்ன பதில் சொல்லுவ தென்றே அவளுக்குப் புரியவில்லை. ‘'என்ன தங்கம்? ஏன் பேசாமலிருக்கிறாய்? நான் சொல்லுவது உனக்குப்பிடிக்கவில்லையா? " என்று கேட்டாள் ராதா. "ராதா, நானே நடராசனைப் பார்த்து உன்னைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறேன். நீ வீணாக அலட்டிக் கொள்ளாதே’ என்றாள் தங்கம். 'தங்கம், இன்னும் அவர் கை ஊனத்தைப் பற்றி நீ குறைப்பட்டு கொண்டுதான் இருக்கிறாயா?’’ என்று சினத்தோடு கேட்டாள் ராதா. 'இல்லை ராதா! ஆனால், உன்னால் நேசிக்கப்பட்ட அவரை உன்னோடு சேர்த்து வைத்துப் பார்க்க ஆசைப்படு கிறேன்! இது தவறா?' என்று திருப்பிக் கேட்டாள் தங்கம். "தங்கம், அது உன்னால் முடியாது. நீ வீணாக என்னைக் குழப்பாதே, அவர் உன்னைக் காதலிக்கிறார். நீ அவரை ஏற்றுக் கொள், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே எனக்குத் திருப்தி' என்றாள் ராதா. ராதா தன் முடிவை மாற்றிக் கொள்வாள் என்று தோன்றவில்லை. தன்னைப் போல் எதிலும் ஒரே குழப்பமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/310&oldid=854436" இலிருந்து மீள்விக்கப்பட்டது