பக்கம்:மன ஊஞ்சல்.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 299 இராமல், எப்போதும் சரியான ஒரு முடிவுக்கு ராதா வந்துவிடக் கூடியவள் என்பதைத் தங்கம் பல சமயங்களில் கண்டிருக்கிறாள். ஆகவே, அவள் ராதாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட வேண்டியதாயிற்று. கடைசியில் ஒரு தெளிவான முடிவுக்கு வராமலேயே, தங்கம் ராதாவுக்குத் தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித் தருவதாகச் சொன்னாள். ராதாவின் 'முகத்தில் அப்போது ஒரு விதமான சாந்தி யொளி பிறந்தது. கட்டுக் கவலையற்ற பேரறிவாளர்களின் அகத்திலும் முகத்திலும் காணப்படுகின்ற அந்த ஒளி அவள் அகத்திலும் முகத்திலும் நிறைந்திருந்தது. ராதாவை உற்று நோக்கிய தங்கத்திற்கு அவள், மிக உயர்ந்தவளாகக் காணப்பட்டாள். மனித குணத்தின் உயர்வான நிலையில் ராதா சஞ்சரித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. ராதா, தன்னிடம் விடைபெற்றுக் கொண்டு அறையை விட்டுச் சென்ற பின் விளக்கை யணைத்து விட்டுத் தங்கம் படுக்கையில் வந்து சாய்ந்தாள். அந்த அறை இருளில் மூழ்கிக் கிடப்பது அவளுக்குத் தெரியவில்லை. அங்கே தியாக வடிவமான ஒரு பேரொளி நிறைந்து அது உலகத்தைத் தெளிவாக்கிக் காட்டிக் கொண் டிருப்பது போல் தோன்றியது. ராதாவின் தியாக உள்ளத்தை எண்ணிப் பார்க்கப் பார்க்கத் தங்கத்திற்குத் தானும் தியாக வாழ்வு வாழ வேண்டும் போல் தோன்றியது. தான் நடராசனை விரும்பா விட்டாலும், ராதாவிற்காக அந்தத் தியாக வாழ்வை ஏற்றுக் கொள்ள வேண்டும்போல் தோன்றியது. இனித் தான் குழப்பமடைய வேண்டியதில்லை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/311&oldid=854437" இலிருந்து மீள்விக்கப்பட்டது