பக்கம்:மன ஊஞ்சல்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 மன ஊஞ்சல் இனித்தான் எவ்விதமான உணர்ச்சிகளுக்கும், ஆட் பட்டுத் தவித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒரே முடிவு! நடராசனைத் திருமணம் புரிந்து கொண்டுவிட வேண்டும், இதில் மாற்றமில்லை. இவ்வாறு உறுதி செய்து கொண்டு தங்கம் கண்ணை மூடினாள். ம ைக்குழப்பத்திற்கெல்லாம் ஒரு முடிவு கண்டுவிட்ட அவளைத் துரக்கம் உடனே வந்து தழுவிக்கொண்டது. காலையில் தங்கம் எட்டு மணிக்குத் தான் எழுத்திாள். குளித்து முடித்து விட்டு அவன் தலைவாரிக்கொண்டிகுந்த போது, மலர்க்கொடி வந்து சேர்ந்தாள். மலர்க்கொடியின் அங்க அசைவுகள் ஒவ்வொன்றிலும் ஆனந்தம் துள்ளிக்குதி போட்டுக்கொண்டிருந்தது. அறைக்குள் நுழையும்போதே, 'தங்கம்! ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன்!” என்று சொல்லிக் கொண்டே வந்தாள். "அப்படி என்ன? திருமணச் செய்தியா!' என்று கேவியாகக் கேட்டாள் தங்கம். 'உனக்கு முன்னாலே தெரியுமா? யார் சொன்னது?" என்று கேட்டாள் மலர்க்கொடி. "யாரும் சொல்லவில்லை. எதுவும் தெரியாது. ஆமாம், என்ன செய்தி: ' என்று விசாரித்தாள் தங்கம். 'தங்கம்...எனக்கு...திரு.நிச்சயமாகிவிட்டது வெட் கத்தால் சொற்கள் வெளிவரவில்லை. சொல்வி முடிப் பதற்குள் மலர்க்கொடியின் முகம் குங்குமம்போல சிவந்து • لټئ-ـــــــتاتنټ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/312&oldid=854438" இலிருந்து மீள்விக்கப்பட்டது