பக்கம்:மன ஊஞ்சல்.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 301 'திருமணமா? காதல் திருமணம் தானே?' என்று கேட்டாள் தங்கம், மலர்க்கொடியின் முகம் மேலும் சிவந்தது, “ஏண்டி, உனக்கு எல்லாம் தெரியும் போலிருக்கிறதே! யாரடி சொன்னார்? அவர் யாரென்றுகூடத் தெரியுமா உனக்கு?’’ என்று கேட்டாள் மலர்க் கொடி. "தெரியுமே, சொல்லட்டுமா?' என்றாள் தங்கம். 'சொல்வேன்!' -தன் காதலர் பெயரைக் காது குளிரக் கேட்கவேண்டும் என்ற ஆவலோடு கேட்டால் மலர்க்கொடி. "சொல்லுகிறேன், அவர் தான் .அவர் . தான்..உன். காதலர்!’ என்று விளையாடினாள் தங்கம். தங்கம் விஷயத்தைத் தெரிந்து கொண்டுதான் பேசு கிறாள் என்று மலர்க்கொடி எண்ணி, மேற்கொண்டு விவரங்கள் கூறத் தொடங்கினாள். "தங்கம், நாளைக்குத்தான் அவர் சீமையிலிருந்து வருகிறார். அவரை வரவேற்க மீனம்பாக்கத்திற்குப் போகிறோம். தங்கம், நீயும் ராதாவும் என்னோடு வரு கிறீர்களா' என்று ஆசையோடு கேட்டாள் மலர்க்கொடி. 'சீமையிலிருந்தா? யாரது?" என்று கேட்டாள் தங்கம். இதுவரை மலர்க்கொடியின் காதலன் ராஜு என்று எண்ணிக் கொண்டிருந்தாள் தங்கம். மலர்க்கொடியின் பதில் அந்த எண்ணத்தைத் துTளாக்கிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/313&oldid=854439" இலிருந்து மீள்விக்கப்பட்டது