பக்கம்:மன ஊஞ்சல்.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ID60s ஊஞ்சல் 30. நம்பமுடியவில்லையே! "உனக்கு ஒன்றுமே தெரியாதா? பெரிய ஆளடி நீ! எல்லாந் தெரிந்தவள்போல் காட்டிக்கொண்டாயே. என் அத்தை மகன் இரத்தினசாமி சீமைக்குப் படிக்கப் போயிருந்தார். அவர் இப்போது திரும்பி வருகிறார். அவர் வந்தவுடனேயே திருமண ஏற்பாடுகளைக் க வணிக்கப் போகிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்குள் திருமணம் நடந்துவிடும்' என்று மலர்க்கொடி கூறினாள். அப்பொழுது அவள் முகமெல்லாம் இன்ப உணர்ச்சியால் மலர்ந்திருந்தது. தங்கத்தினால் இந்தச் செய்தியை நம்பவே முடிய வில்லை. அப்படியானால், ராஜுவை...? ராஜாவை மலர்க் கொடி காதலிக்கவில்லையா? காதல் ஜோடிகள்போல் அவர் கள் நடந்துகொண்டதெல்லாம் அர்த்தமற்றவை தானா? இவ்வாறு அவளுடைய சிந்தனைப் பொறி இயங்கிக் கொண் டிருந்தது "என்னடி தங்கம், பேசாமலிருக்கிறாய்? நாளைக்கு மீனம்பாக்கத்திற்கு வருகிறாயா, இல்லையா?' என்று கேட் டாள் மலர்க்கொடி. 'அப்படியானால் ராஜு. ?’ என்றாள் தங்கம் .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/314&oldid=854440" இலிருந்து மீள்விக்கப்பட்டது