பக்கம்:மன ஊஞ்சல்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 303 'அதானே பார்த்தேன். நான் சந்தேகப்பட்டது உண்மையாகிவிட்டது. ராஜூ இல்லாமல் தங்கம் வரலாமா? ராஜு நிச்சயம் வருகிறார். அதுமட்டுமல்ல, இலக்கியக் கழகத்தின் சார்பாக என் அத்தானுக்கு மாலையிட்டு வர வேற்புப் பத்திரம் கூட வாசித்தளிக்கப் போகிறார் உன் ராஜூ என்றாள் மலர்க்கொடி. மலர்க்கொடி பேசிய போக்கு தங்கத்தை மேலும் அதிர வைத்தது. 'மலர்க்கொடி, என்ன பேசுகிறாய்?' என்று கடுமையான குரலில் கேட்டாள் தங்கம். அவள் கடுமையைச் சிறிது புரிந்து கொண்டாள் மலர்க்கொடி. ‘:ஏண்டி தங்கம்? ஒவ்வொரு தடவையும் நீ அவரை ஏக்கப் பெருமூச்சோடு பார்ப்பதையும் அவருடன் கலகலப் பாகப் பேசாமல், நாணித் திரும்புவதையும் நான் கவனிக்க வில்லையென்றா நினைக்கிறாய்? அவரைப் பார்த்துக் கொண்டே யிருக்க வேண்டும் என்று நீ ஆசைப்படுவதும், உன் நாணம் அதற்குத் தடை போடுவதும் என்க்கு யூகிக்கத் தெரியாதென்றே நினைத்தாய். தங்கம், நானும் ஒரு பெண் தான டி!' என்றாள் மலர்க்கொடி. தங்கம் இந்தச் சொற்களைக் கேட்ட தும் மலைத்துப் போய்விட்டாள். மலர்க்கொடி ராஜூவைக் காதலிக்கிறாள் என்று தான் நினைத்துக்கொண்டிருக்க, தான் ராஜுவைக் காதலிப்பதாக அவள் நினைத்துக்கொடிருக்கிறாள். இதில் எது உண்மை யென்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. மலர்க் கொடியும் ராஜூவும் கலகலப்பாகப் பழகிய விதம், அவர்கள் ஒருவரையொருவர் காதலிப்பதாக எண்ணும்படி இருந்தது, ஆனால், கலகலப்பாகப் பழகாததே காதலுக்குச் சாட்சி யென்று மலர்க்கொடி இப்போது சொல்லுகிறாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/315&oldid=854441" இலிருந்து மீள்விக்கப்பட்டது