பக்கம்:மன ஊஞ்சல்.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 மன ஊஞ்சல் தன்னைப் பொறுத்தவரையில் சில சமயம் ராஜூவிடம் தன் மனம் பாய்ந்ததைத் தங்கம் மறக்கமுடியாது. ஆனால், ராஜூவும் மலர்க்கொடியும் காதலர்கள் அல்ல என்பதையும் அவளால் நம்வமுடியவில்லை. "மலர்க்கொடி. ராஜுவை நீ...' என்று தங்கம் முழு வதும் கேட்காமல் விட்டுவிட்டாள். மலர்க்கொடி ராஜுவை நீ உண்மையில் காதலிக்கவில்லையா? என்றுதான் அவள் கேட்க எண்ணினாள். ஆனால், மலர்க்கொடி அந்த அரை குறையான வார்த்தைகளைக் கேட்டு வேறு விதமாகப் பொருள் கொண்டு விட்டாள். 'ஓ! அவரையும் நான் நேரே கேட்டு விட்டேன். 'உள்ளதைச் சொல்லுங்கள். தங்கத்தை நீங்கள் காதலிக் கிறீர்களா இல்லையா? என்று. அவர்தான் உன்னை நினைத்து நினைத்து உருகுகிறாரே!” என்றாள் மலர்க்கொடி. தங்கத்தின் எண்ணம் கலங்கியது, அவளால் ஒரு நிலை யில் நிற்க முடியவில்லை. சுவர் ஒரமாக இருந்த ஒரு நாற்காலிக்குச் சென்று அதில் அவள் சாய்ந்துகொண்டாள். இரவு அவள் கொண்டிருந்த அமைதியை மலர்க்கொடி பறக் கடித்து விட்டாள். தங்கத்தின் நிலையைக் கண்ட மலர்க் கொடி பயந்து விட்டாள். 'தங்கம் நான் ஏதும் தவறாகச் சொல்லி விட்டேனோ?' என்று அவள் பரிவோடு கேட்டாள். 'இல்லை. மலர்க்கொடி இல்லை. நீ ராஜாவைப் பார்த் தால் சொல்லிவிடு, வீணாக அவர் என்னை நினைத்து உருக வேண்டாம் என்று சொல்லி விடு. இந்த உதவியை மட்டும் எனக்குச் செய்' என்று ஆயாசத்தோடு கூறினாள் தங்கம். மலர்க்கொடிக்கு இது பெரும் வியப்பளித்தது. மேலும் கேள்விகள் கேட்டுத் தங்கத்தைத் துன்புறுத்தக் கூடாதென்று அவள் தீர்மானித்துக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/316&oldid=854442" இலிருந்து மீள்விக்கப்பட்டது