பக்கம்:மன ஊஞ்சல்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 305 'தங்கம், அப்படியே சொல்லுகிறேன். நாளை நீயும் இராதாவும் மீனம்பாக்கத்திற்கு அவசியம் வரவேண்டும்!" என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விட்டாள். தங்கம் அவள் போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். மலர்க்கொடியும் ராஜூவும் ஒருவரையொருவர் காதலிக் கிறார்கள் என்று அவள் நம்பிக் கொண்டிருந்ததால் தான், முதல் நாள் இரவு தான் இராதாவிற்கு நடராசனை மணம் புரிந்து கொள்வதாக உறுதி கூற முடிந்தது. இப்போதோ அவள் மனம் மீண்டும் குழப்பமடைந்தது, ஆனால். அவள் ராதாவிற்குக் கொடுத்த வாக்குறுதியை மீற விரும்பவில்லை . ஏற்கனவே முடிவு செய்தபடி தான் தியாக வாழ்வு வாழ்வ தென்று உறுதி பூண்டு விட்டாள். அந்த உறுதியின் பலனாகத்தான் அவள் மலர்க்கொடியிடம், ராஜுவைச் சந்தித்தால் வீணாகத் தன்னை நினைத்து உருக வேண்டாம் என்று சொல்லி விடும்படி வேண்டிக்கொண்டாள். அன்று முழுவதும் தங்கம். மீண்டும் தன் மனத்துக்கு வேலை வைக்காத முறையில் வேறு வேலைகளில் சுறுசுறுப் பாக ஈடுபடுபடலானாள். தன் தாயாருக்கு உதவியாகச் சமையல் வேலையில் ஈடுபட்டாள். மாலை நேரம் வந்ததும், ராதாவை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குப் போனாள். ஆங்கு ராதாவுடன் ஊர்க் கதைகளைப்பற்றிப் பேசிக் கொண் டிருந்துவிட்டுத் திரும்பினாள். ராதாவின் மன உறுதியைப் பார்க்கும் போதெல்லாம் தங்கத்திற்கு வியப்பாக இருந்தது. ராதாவின் மனவுறுதி கலங்கும்படியாகத் தான் நடந்து கொள்ளவே கூடாது என்று அவள் தன் மனத்திற்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டாள், tp--20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/317&oldid=854443" இலிருந்து மீள்விக்கப்பட்டது