பக்கம்:மன ஊஞ்சல்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$06 மன ஊஞ்சல் மறுநாள் மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குச் செல்வதற்காக அவர்களை அழைத்துச் செல்ல மலர்க்கொடி கார் ஒட்டிக்கொண்டு வந்தாள். அதன்பின் சீட்டில், ராஜூ அமர்ந்திருந்தான். மலர்க்கொடி, காரை வெளியில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் ஓடி வந்து தங்கத்தையும் ராதாவையும் அழைத்துக் கொண்டு வந்தாள். வந்த வேகத்தில் சங்கமும் ராதாவும் பின் சீட்டில் ஏறுவதற்காகத் திரும்பியவர்கள் அங்கு ராஜுவைக் கண்டவுடன. சட்டென்று முன் பக்கத்துக் கதவை திறந்து கொண்டு அதிலே ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். முன் சீட்டில் மூன்று பெண்களும் நெருக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் பின் சீட்டில் ராஜா மட்டும் உட்கார்ந்திருந்தான் மலர்க்கொடி மற்ற சந்தர்ப்பங் களாக இருந்தால், ஏதாவது சொல்லி யாராவது ஒருத்தியை ஏன் தங்கத்தையே பின் சீட்டில் ராஜூவுடன் உட்கார வைத்திருப்பாள். ஆனால், அப்போது அவள் எதுவும் பேசவில்லை. எதிரில் காரின் மேற்பகுதியில் நடுமையத்தில் இருந்த சின்னஞ் சிறிய கண்ணாடிக்குள் ராஜூவின் முகம் தெரிந்தது, அதைச் சில சமயங்களில் தங்கம் தற்செயலாகக் கவனிக்க நேர்ந்தது. அந்த முகத்தில் எந்தவிதமான கலக்கமோ துக்கமோ தென்படவில்லை, மலர்க்கொடி இன்னும் தான் சொன்ன செய்திகளை அவனிடம் சொல்லவில்லை போலிருக் இறது என்று தங்கம் எண்ணிக்கொண்டாள். விமானத்தில் வந்திறங்கிய மலர்க்கொடியின் அத்தை மகன் இரத்தினசாமி அவளுக்கு எல்லாவிதத்திலும் பொருத்த மானவனாகவே காணப்பட்டான். சற்றுச் சிவந்த நிறமாகவும் வாட்டசாட்டமாகவும் வெள்ளையர் உடுப்புகளுடனும் விளங்கிய அவன் நாகரிகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/318&oldid=854444" இலிருந்து மீள்விக்கப்பட்டது