பக்கம்:மன ஊஞ்சல்.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் ஊஞ்சல் 307 பாணியில் வளர்ந்து விட்ட மலர்க்கொடிக்கு முற்றிலும் தகுந்த கணவனாக இருந்தான். விமானத்திலிருந்து இறங்கி நிலையத்துக்குள் வந்து நுழைந்தவுடன் மலர்க்கொடி துள்ளிப் போய் அத்தான் நலமா? என்று மலர் முகத்தோடு கலம் விசாரித்து வரவேற்றாள். அவன், 'ஆ! மலர்க்கொடி நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய்! எவ்வளவு பெரியவளாகி விட்டாய்?" என்று கேட்டுக்கொண்டே ஆசையோடு அவள் கையைப் பிடித்துக் குலுக்கினான். பிறகு அங்கு வந்திருந்த ஒவ்வொரு வருடனும் அவன் நலம் விசாரித்துக் கை குலுக்கி அன்போடு பேசினான். எல்லோரும் வழக்கறிஞர் வீட்டுக்கு வந்து விருந் துண்டார்கள். அதன்பிறகு விருந்தினர்கள் தத்தம் வீடு களுக்குத் திரும்பினார்கள். தங்கமும் இராதாவும் ஜமீன்தார் மாளிகைக்கு வந்து சேர்ந்தார்கள். மரகத அம்மாள் விமானம் பறந்து வந்ததைப் பற்றியும், மற்ற நிகழ்ச்சிகளைப் பற்றியும் தன் மகளிடமிருந்தும் இராதாவிடமிருந்தும் விசாரித்துத் தெரிந்து கொண்டு பெரும் வியப்படைந்தாள். அன்று மாலைவரை தங்கம் ஒய்வில்லாமலே பொழுதைக் கழித்து விட்டாள். ஆனால், இரவு படுக்கைக்குச் சென்ற பிறகு அவள் இதயம் மீண்டும் பலவிதமான சிந்தனைகளில் ஈடுபட்டது. திரும்பத் திரும்ப நடராசனும், ராஜூவும் அவள் மனத்திரையியிலே வந்து வட்டமிட்டனர். ஒருமுறை தன் உறுதிமொழியை மீறி நடக்கக் கூடாது என்று தங்கம் நினைப்பாள். இன்னொரு முறை தன் வாழ் நாள் முழுவதும் இப்படிப்பட்ட மனப் போராட்டத்தோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/319&oldid=854445" இலிருந்து மீள்விக்கப்பட்டது