பக்கம்:மன ஊஞ்சல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 மன ஊஞ்சல் அண்ணாமலைப் பண்டிதர், 'சமையல் மிக அருமை. பொருள் சாதாரணமாக இருந்தாலும், அதை ஆக்கிப்படைக்கிற கை சுவையுடைய தாக்கிவிடுகிறது' என்றார். அன்று தங்கம்தான் சமைத்திருந்தாள். தன்னை அவர் பாராட்டிப் பேசுவதாக எண்ணிக் கொண்டு வெட்கத்துடன் அவள் உள்ளே ஓடிவிட்டாள். ஆனால் அதைக் கவனித்தும் கவனிக்காதவர் போல் பேசாமல் இருந்து விட்டார் அண்ணா மலைப்பண்டிதர். சமைத்தது யார் என்றோ, உள்ளே ஓடிய அந்தப்பெண் யார் என்றோ அவர் விசாரிக்கவேயில்லை. இது தங்கத்திற்குக் கொஞ்சம் வருத்தமாயிருந்தது. 'ஆக்கிய பொருளைப் புகழ்ந்தவர், அதை ஆக்கியவளை அறிந்து கொள்ள விரும்பாதது ஏனோ?" என்று அவள் மனம் வருந்தியது. நாடெங்கும் புகழ் பெற்ற அந்தப் பண்டிதர். தன்னை மனமாரப் புகழவில்லையே என்று அவள் சிறிது வருத்தப்பட்டாள். அண்ணாமலைப் பண்டிதரை இரண்டு மூன்று நாட் களுக்குத் தன் வீட்டில் விருந்தாளியாக வைத்திருந்து பிறகு அனுப்ப வேண்டும் என்று எண்ணித்தான் கந்தசாமி வாத்தியார் அவரைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால், அவர் இரண்டு மூன்று நாட்கள் ஆனபிறகும் சொல்லிக் கொண்டு போவதாகத் தெரியவில்லை. அதற்காகக் கந்தசாமி வாத்தியாரோ, மரகதமோ, தங்கமோ, வருத்தப் படவில்லை. பண்டிதருக்கு வேண்டிய வசதிகளையெல்லாம் தங்கம் தான் ஒடியோடிக் கவனித்து வந்தாள். அந்த மனிதர் அதற்காக ஒரு சிறிதாவது நன்றி கூறினாரா என்றால் கிடையவே கிடையாது . ஒரு வாரம் வரையிருந்த பண்டிதர் ஒரு நாள் கந்தசாமி வாத்தியாரை நோக்கிக் கேட்டார். 'கந்தசாமி, கதலிப் பட்டணத்திலே நான் தன்னந் தனியாக இருக்கிறேன். கடைச் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக் கொள்ள வில்லை, கொஞ்சம் உடம்பு தேறுகிறவரை இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/32&oldid=854446" இலிருந்து மீள்விக்கப்பட்டது