பக்கம்:மன ஊஞ்சல்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்படிக் கழிப்பதென்று எண்ணுவாள். ஒருமுறை பாவம், ராதா! அவள் இன்ப ஆசை நிறைவேறாவிட்டாலும் அவள் இலட்சிய விருப்பமாவது நிறைவேற வேண்டும் என்று கருதுவாள். மீண்டும் நடராசனும் ராஜூவும் ஒன்றாக வந்து நின்று அவள் மனத்தில் கடமை வாழ்வு பெரிதா காதல்வாழ்வு பெரிதா என்ற விவாதத்தைத் தொடக்கி வைப்பார்கள். அவள் தன் மனத்திற்கு அறிவுரை கூறுவாள். வீணாக ஏன் அலட்டிக் கொள்கிறாய். நடராசன் தான் உனக்கென்றே பிறந்தவன். நீ வேண்டாமென்று ஓடினாலும் அவன் உன்னை நோக்கியே தள்ளப் படுவான். தன் முயற்சி யில்லாவிட்டாலும், காலம் அவனை உன்னிடம் தள்ளிக் கொண்டு வந்து சேர்க்கத் தயங்குவதாகத் தெரியவில்லை. பேசாமல், இனி உன் கணவன் காதலன் எல்லாம் அந்த நடராசன் ஒருவனேயென்ற நினைப்போடிரு! என்று அவள் தன் மனத்தைத் திடப்படுத்திக் கொள்வாள். இப்படியே இரவுப் பொழுதெல்லாம் ஒவ்வொன்றாகக் கழிந்தன. ஐந்தாறு நாட்கள் சென்ற பிறகு அவளுக்கு நடராசனை ஒரு முறை பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால், அவன் எங்கேயிருக்கிறான் என்று தெரியாததால் என்ன செய்வது? ராதாவிடம், ராதா! நடராசன் எங்கே யிருக்கிறார், தெரியுமா?" என்று கேட்டாள். - 'தங்கம், நீதானே அன்று கடிதம் கொடுத்தாய். அதைத் தவிர வேறு எனக்கொன்றும் தெரியாதே! என்று ராதா கூறிவிட்டாள். உண்மைதானே, எங்கிருந்தாலும் அவளும் தானும் ஒன்றாகவே இருக்கும்போது, அவளுக்கு மட்டும் தனக்குத் தெரியாத செய்தி வேறு ஏதேனும் புதிதாகத் தெரிந்து விடவா போகிறது என்று எண்ணினாள் தங்கம், நாட்கள் வீண் பொழுதுகளாகக் கழிந்துக்கொண்டிருந் தன. தங்கத்திற்குப் பட்டணத்தில் இருந்தது போதும் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/320&oldid=854447" இலிருந்து மீள்விக்கப்பட்டது