பக்கம்:மன ஊஞ்சல்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 309 தோன்றியது கயிலாய மாமாவிடம், அனுமதி வாங்கிக் கொண்டு நெய்யூருக்குப் போய்விட வேண்டும் என்று எண்ணினாள் அவள் எண்ணியதற்குத் தோதாக அவரே வந்து, 'தங்கம் நாளைக்குக் கதவிப்பட்டணம் புறப்படப் போகிறோம். நீ இங்கேயே இருக்கிறாயா? எங்களோடு வருகிறாயா?" என்று கேட்டார்! 'வருகிறேன்' என்று தங்கம் பதில் சொன்னாள்: 'தங்கம், அம்மா தான் அங்கே அப்பாவை மட்டும் தனி யாக விட்டு விட்டு வந்துவிட்டதாக வருத்தப்படுகிறாள். நீ இன்னும் கொஞ்ச நாள் இங்கேயே இருந்துவிட்டுப் போனாலென்ன" என்று ஜமீந்தாரிணி பெரியம்மாள் கேட்டாள். 'அம்மா, எனக்கும் அப்பாவைப் பார்க்க வேண்டுபோலி ருக்கிறது!’ என்று தங்கம் சொன்னாள். மறுநாள் அவர்கள் புறப்படுவதற்கு ஆயத்தம் செய் தார்கள். அன்று மாலை ஜமீந்தாரிணியம்மாள் தங்கத்தை யும் ராதாவையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சைனா பஜாருக்கு சென்றாள். தங்கத்தையும் ராதாவையும் 'இது நல்லாயிருக்கிறதா’ என்று கேட்டு வகை வகையாகப் புடவைகள் துணி மணிகள் வாங்கினாள். எல்லாம் வாங்கி யதும் வீட்டுக்குத் திரும்பி வந்தார்கள். மறுநாள் அவர்கள் ரயிலுக்குப் புறப்படும்போது தங்கள் சாமான்களோடு ஒரு புது டிரங்குப்பெட்டி இருப்பதைத் தங்கம் கண்டாள். அது கயிலாய மாமாவுடையதாக இருக்கும் என்று தங்கம் எண்ணிக் கொண்டாள். ஆனால், அவர்கள் கதலிப்பட்டணம் மாளிகைக்கு வந்து சேர்ந்த பிறகு, எல்லோரும் ஒன்றாக இருக்கையில் கயிலாயம் அந்தப் பெட்டியைத் திறந்தார். அதில் ஜமீந்தாரிணியம்மாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/321&oldid=854448" இலிருந்து மீள்விக்கப்பட்டது