பக்கம்:மன ஊஞ்சல்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 மன ஊஞ்சல் வாங்கிய புடவை துணிமணிகள் அத்தனையும் இருந்தன. அதில் தனியாக ஒரு சிறு கட்டு இருந்தது. அதைத் தனியாக எடுத்து இராதாவிடம் கொடுத்தார் கயிலாயம். 'இதெல்லாம் ஜமீந்தாரிணியம்மாளுடைய தாயிற்றே!' என்று தங்கம் கேட்டாள். 'தங்கம், ஜமீந்தாரிணியம்மாள் உங்களுக்காக வாங்கியது தான் இவையெல்லாம்” என்றார் கயிலாயம். அந்தச் சிறு கட்டை எடுத்து ராதாவிடம் கொடுத்து இந்தா, ராதா! ஜமீந்தாரிணியம்மாள் இதையுனக்குக் கொடுக்கச் சொன் னாள் என்றார். ராதா அதை வாங்க மறுத்து விட்டாள். தங்கமும் 'ஜமீந்தாரிணியம்மாள் நமக்கு ஏன் இதையெல்லாம் வாங்கித் தரவேண்டும்?” என்று கோபித்துக் கொண்டாள். 'அம்மா, அன்புடையவர்கள், தங்கள் அன்பை எப்படி யாவது காட்டிக் கொள்ளத் துடிப்பது உலகத்து இயற்கை கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குக் கூடச் சர்க்கரையோ சாம்பிராணியோ காண்பித்துத் தங்கள் அன்பைக் காட்டிக் கொள்ளுகிறவர்கள் வாழ்கிற உலகம் இது. மெய் அன்பு வைத்திருந்தால் போதும் என்று எண்ணினாலும், அந்த அன்புடையவர்கள் மனம் அதை எப்படியாவது வெளிப் படுத்தாமல் இருக்கும் வரை அமைதியடைவதில்லை. பெரியவர்கள் களங்கமற்ற அன்புடன் கொடுக்கும் வெகுமதி களைப் பெற்றுக் கொள்வது இழிவல்ல என்று கயிலாயம் கூறியபிறகுதான் இரண்டு பெண்களும் அந்தத் துணிமணி களை ஏற்றுக் கொண்டார்கள். கதலிப் பட்டணம் வந்த அன்று பகல் உணவுக்குப் பிறகு, தங்கம் தானும் நெய்யூருக்கு அம்மாவுடனும்இராதாவுடனும் போய் அப்பாவைப் பார்த்து விட்டு வரவேண்டும் என்று சொன்னாள். கயிலாயம் சம்மதித்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/322&oldid=854449" இலிருந்து மீள்விக்கப்பட்டது