பக்கம்:மன ஊஞ்சல்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 311 கந்தசாமி வாத்தியார் தன் LQ感g@豪了 அன்புடன் வரவேற்றார். தங்கம், வீடெல்லாம் சுத்தம் செய்து விட்டு மல்லிகைப் பந்தலுக்குப் போனாள், மல்லிகைப்பந்தலில் ஆங்காங்கே ஒன்றிரண்டு அரும்பு, பூக்கள்தான் இருந்தன. கீழே எல்லாம் புல்லுப் பூண்டுகள் காடாய் மண்டிக்கிடந்தன. அவள் உடனே கீழ்த் தரையைச் சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபட்டாள். அப்போது கந்தசாமி வாத்தியார் அங்கே வந்தார். 'அப்பா!' என்று அழைத்துக் கொண்டே அவரை நோக்கி வந்த தங்கம், தன் தந்தை தன்னிடம் ஏதோ பேச எண்ணுகிறார் என்று தெரிந்து கொண்டாள். அவரும் பேசத் தொடங்கினார். 'தங்கம், எங்கே உனக்குத் திருமணமே செய்து வைக்காமல் நான் செத்துப்போய்விடுவேனோ என்று எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது உன் மாமா வந்தவுடன் அந்தக் கவலை என்னை விட்டுப் போய்விட்டது. இன்னும் உன்னைத் திருமணமாகாமல் வைத்துக்கொண்டிருப்பது பொருத்தமில்லை. உடனடியாக உனக்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என்று உன் அம்மாவும் துடியாய்த் இருக்கிறாள். நீ என்னம்மா சொல்லுகிறாய்?' என்று கேட்டார். "'உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள் அப்பா!' என்றாள் தங்கம். "அப்படியானால், மாப்பிள்ளை பார்க்கச் தொடங் கட்டுமா தங்கம்?" என்று கேட்டார் கந்தசாமி. "அப்பா ...” என்று மேலே பேசமுடியாமல் தயங்கினாள் தங்கம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/323&oldid=854450" இலிருந்து மீள்விக்கப்பட்டது