பக்கம்:மன ஊஞ்சல்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 மன ஊஞ்சல் ஏனம்மா? யாரையும் மனத்துக்குள் நினைத்து வைத்திருக்கிறாயா? சொல்லம்மா! உன் மனம்போல் செய்து வைக்கிறேன்!” என்றார் கந்தசாமி வாத்தியார். தங்கம் சொல்லமுடியாமல் திணறினாள். ஏற்கனவே, அவர் நடராசனைத் தனக்குத் திருமணம் செய்து வைக்க இருப்பதாகச் சொன்னபோது அழுத அழுகை இப்போது அவளுக்கு நினைவு வந்தது. அதனால், இப்போது அவளால் வாய் திறந்து சொல்லமுடியவில்லை. "அம்மா, உனக்குத் தயக்கமாக இருந்தால், ராதாவிடம் சொல்லம்மா' என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். அன்று இரவு ராதா மூலமாக மரகத அம்மாள் தங்கத்தின் கருத்தைத் தெரிந்துகொண்டு, அதைக் கந்தசாமி வாத்தியாரிடம் கூறியபோது, அவரால் நம்ப முடியவில்லை. "என்ன? நடராசனைத்தான் தங்கம் விரும்புகிறாளா? நம்பமுடியவில்லை! இருந்தாலும், அவனை எங்கே போய்க் கண்டுபிடிப்பது?’ என்று அவர் மரகத அம்மாளிடம் கூறிய போது அவர் நெஞ்சில் வியப்பும் திகைப்பும் நிரம்பியிருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/324&oldid=854451" இலிருந்து மீள்விக்கப்பட்டது