பக்கம்:மன ஊஞ்சல்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IDEJT ஊஞ்சல் 31. தங்கத்தின் மன உறுதி. கந்தசாமி வாத்தியார், முருகேச வாத்தியாரிடம் இந்தச் செய்தியைக் கூறியபோது அவர் அடைந்த திகைப்பும் வியப்பும் சொல்லத் தக்கதன்று. நான் இந்த உலகத்தில் தான் இருக்கிறேனா என்றே அவருக்குச் சந்தேகம் வந்து விட்டது. தங்கத்திடம் எப்படி இந்த மாறுதல் ஏற்பட்டது என்பதை அந்த இரண்டு வாத்தியார்களாலும் சரியாகவோ முழுதாகவோ புரிந்துகொள்ள முடியவில்லை. அகப் பாட்டுக்களிலே வருகின்ற தலைவிமார்களைப் பற்றி அந்தக் காலத்துப் புலவர்கள் எழுதி வைத்துள்ள இன்பியல் துறைச் சொற்களைப் பற்றியெல்லாம் நுணுகி நுணுகி ஆராய்ந்து பெருங் கண்டுபிடிப்புகள் செய்து தம் புலமைக்கு மெருகிட்டுக் கொண்ட அந்த ஆசிரியர்களால், தங்கத்தின் இந்த மனேர் மாறுதலுக்கு மட்டும் பொருள் புரிந்துகொள்ள முடியவே யில்லை. தங்கம், சாதாரணப் பெண்ணாக, சம்பளத்தைத் தவிர வேறு வரும்படியில்லாத கந்தசாமி வாத்தியாரின் மகளாக மட்டும் இருந்த காலத்தில் இந்த முடிவுக்கு வந்திருப்பாளே யானால், அவர்கள் சிறிதும் அது குறித்து ஆச்சரியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/325&oldid=854452" இலிருந்து மீள்விக்கப்பட்டது