பக்கம்:மன ஊஞ்சல்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 மன ஊஞ்சல் பட்டிருக்கவே மாட்டார்கள். பெரும் பணக்காரியாகவும், ஒரு ஜமீன் மாளிகைக்கே அதிபதியாகவும் உள்ள நிலையில், சாதாரணமான ஒரு பள்ளி ஆசிரியரின் வளர்ப்புப் பிள்ளையின் மேல், அதுவும் தான் வெறுத்தொதுக்கிய ஒருவனின் மேல் அவள் அன்புகாட்டத் தொடங்கியதுதான் அவர்களால் நினைத்துப் பார்க்கமுடியாத ஆச்சரியமாக இருந்தது. அந்த நாளிலாக இருந்தால், நமக்குத் திருமணமாக வழியேயில்லை; குடும்பத்தின் துயரத்தைத் தீர்க்க இந்த நடராசனையாவது மணம் புரிந்துகொள்ளுவோம் என்று அவள் தன் மனத்தைச் சரிப்படுத்திக் கொண்டதாக எண்ணிக்கொள்ளலாம். இப்போது அப்படி எண்ணக்கூடிய வாய்ப்பேயில்லை. கந்தசாமி வாத்தியாரைப் பார்த்து முருகேச வாத்தியார் நாத்தழுதழுக்கக் கூறினார்! 'கந்தசாமி இந்த உலகத்தை என்னால் நம்பவே முடியவில்லை. என் மகள் நடராசனைத் தான் எடுத்துக் கொள்ளேன், அவன் வாழப் பிறந்தவன் என்று நான் நினைக்கவேயில்லை அவன் வாழ்க்கையிலே ஏற்படுகின்ற திருப்பங்கள் ஒவ்வொன்றும் எனக்கு ஆச்சரியத்தையே உண்டாக்குகின்றன. சின்னஞ் சிறு வயதில் அவனைக் கிணற்றிலே தள்ளிவிட்டு அவன் தாயும் குதித்திருக் கிறாள். பின்னால் குதித்த அவள் இறந்து போக இவன் பிழைத்துக்கொண்டான். கிணற்றுக்குள்ளே யாரோ ஒரு தாயும் குழந்தையும் விழுந்த செய்தியைக் கேட்ட நான் ஒடோடிச் சென்று இருவரையும் கரைக்குத் தூக்கி வந்தேன். அதிலே இவன் பிழைத்துக்கொண்டான், பாவம்! கையில் ஊனமுள்ள பிள்ளையாக இவன் இருந்தான். நான்தான் பரிதாபப்பட்டு என் பிள்ளையாக வளர்த்தேன். வளர்ந்து வந்த இவனோ பைத்தியக்காரனாக இருந்தான். பைத்தியக் காரனாக இருந்தாலும் வளர்த்த பாசத்தால் நான் இவனை எப்படியாவது வாழ வைத்துவிட வேண்டும் என்றுதான் முதலில் தங்கத்துக்கும் இவனுக்கும் மணம் புரிந்து வைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/326&oldid=854453" இலிருந்து மீள்விக்கப்பட்டது