பக்கம்:மன ஊஞ்சல்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 315 முயன்றேன். எதிர்பாராத விதமாக அண்ணாமலைப் பண்டிதர் வந்து பைத்தியத்தைத் தெளிவித்ததோடு மட்டு மல்லாமல் நல்ல அறிஞனாகவும் ஆக்கிவிட்டார். பிறகு அவன் தங்கத்திடம் தன் மனத்தைப் பறிகொடுத்திருக் கிறான். ஆனால் அவளோ விரட்டியடித்து விட்டாள். அதன் பிறகு எங்கோ காணாமல் போய் விட்டான். இப்போது தங்கம் அவனைத் திருமணம் செய்து கொள்ள முடிவு கட்டி யிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. அவ்வாறு நடந்தால் அது மகிழ்ச்சிக்குரியதே! ஆனால், இப்போது எங்கிருக் கிறானோ தெரியவில்லையே!' என்றார். 'என் மைத்துனர் கயிலாயத்தின் மூத்த மனைவி தள் பிள்ளையோடு கிணற்றில் விழுந்து விட்டாள். அதனால் தாள், அவருக்குத் தாய் தந்தையில்லாத பிள்ளைகளிடத்தில் இரக்கமும் அன்பும் உண்டாகிறது. நடராசனையும் அவர் இப்படிப்பட்ட மன இரக்கத்தால்தான் கவனித்து முன் னேற்றத்திற்குக் கொண்டுவர முயன்றிருக்க வேண்டும். ஆனால், அவரிடம்கூடச் சொல்லாமல் நடராசன் திடீரென்று மறைந்து போனதுதான் எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ஆனால். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவன் தங்கத்தை விரும்பி அவள் மறுத்துவிட்டதால் ஓடிவிட்டான் என்று எண்ண வேண்டியிருக்கிறது. ஆனால் இன்று தங்கம் அவனை மணந்து கொள்ள விரும்பும் செய்தி அவனுக்குத் தெரியுமோ என்னவோ?’ என்றார் கந்தசாமி வாத்தியார். இவ்வாறு இரண்டு வாத்தியார்களும் பேசிக் கொண் டிருந்து நடராசனைத் தேடிப் பிடிக்க ஏதாவது வழிகண்டு பிடிக்க வேண்டும் என்றும், வருகிற தைமாதத்தில் தங்கத் திற்கும் நடராசனுக்கும் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்றும் முடிவு கட்டிக் கொண்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/327&oldid=854454" இலிருந்து மீள்விக்கப்பட்டது