பக்கம்:மன ஊஞ்சல்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 மன உளஞ்சல் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் குளத்தங்கரையில் உள்ள வேப்ப மரத்தினடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு முருகேசரைப் பிரிந்து வீட்டிற்கு வந்த கந்தசாமி வாத்தியாருக்கு மற்றுமோர் ஆச்சரியம் காத்திருந்தது. வீட்டில் அவர் நுழையும்போது சற்று முன்தான் அங்கு வந்து சேர்ந்த கயிலாயம் ஊஞ்சலில் போய் உட்கார்ந்தார். ‘'நல்ல வேளை! கந்தசாமி உனக்கு நூறு வயசு. எங்கே நல்ல விஷயமாகப் பேசவரும்போது இவன்வீட்டில் இல்லாமல் போய்விடுகிறானோ என்று எண்ணினேன்! நீயும் வந்து விட்டாய்!” என்றார் கயிலாயம். . “பெரியவர்கள் எந்தக் காலத்தில் எந்த வேளையில் எந்த இடத்தில் எந்தப்பேச்சு பேசினாலும் அது நல்ல விஷயமாகவே யிருக்கும்’ என்று சொல்லிக் கொண்டே கந்தசாமி வாத்தியார் அண்ணாமலைப் பண்டிதரின் எதிரில் பாயில் உட்கார்ந்தார். மரகத அம்மாளும் அவர் ஒரமாகக் குந்தியிருந்தாள். 'கந்தசாமி, சும்மா வேதாந்தம் பேசாதே. இப்போது நான் ஒரு கலியாண விஷயமாகப் பேச வந்திருக்கிறேன்!" என்றார் கயிலாயம். . 'உண்மையில் அது நல்ல வேளைதான்! பேச இருப்பதும் நல்ல விஷயந்தான். சற்று முன் தான் பேசிக் கொண்டிருந் ததும் இதே நல்லவேளைதான்!” என்று கந்தசாமி தன் மனத் திற்குள் எண்ணிக் கொண்டார். 'கந்தசாமி, என்ன பேசாமல் இருக்கிறாய்? நான் உன் கிறேன்" என்று கயிலாயம் கூறியபோது அவர் மேலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/328&oldid=854455" இலிருந்து மீள்விக்கப்பட்டது