பக்கம்:மன ஊஞ்சல்.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 317 வியப்புக் காளானார். ஆனால், கயிலாயம் தொடர்ந்து சொன்ன அத்துச் சொற்கள் அவர் இதயத்தைப் படீரென்று உடைந்து விடும் போல் இருந்தன. “என் மகனுக்கு உன் மகளைக் கட்டிக் கொடுக்கிறாயா? என்று கேட்கத்தான் வந்தேன்’ என்று கயிலாயம் கேட்ட வுடன் மரகத அம்மாளும் அதிர்ச்சியடைந்தாள். 'அண்ணா, தெரிந்துதான் கேட்கிறீர்களா? இரண்டாந் தாரமாக உங்கள் மகனுக்குத் தங்கத்தைக் கட்டிக் கொடுக்க நாங்கள் எப்படி சம்மதிக்க முடியும்? அதுவும் அவனைப் போன்ற தரங்செட்டவனுக்கு எப்படி எங்கிள் பெண்ணைக் கொடுக்க முடியும்?' என்று பொறுக்க முடியாமல் கேட்டு விட்டாள் மரகத அம்மாள். மரகதம், நீ யாரை நினைத்துக்கொண்டு பேசுகிறாய்?" என்று கேட்டார் கயிலாயம். 'அண்ணா, அந்த சுந்தரேசன் குணம் உங்களுக்குத் தெரி யாதா? பெற்றோர் என்ற மரியாதை கூட இல்லாமல் உங்களையே பகைவர் போலக் கருதிய அவனுக்காக நீங்கள் பரிந்து பேச வந்துவிட்டீர்களே! அவன் தங்கத்தைத் தூக்கிக் கொண்டு ஒடியதைக்கூடவா அதற்குள் மறந்துவிட்டிர்கள்?" என்று மனந்தாங்காமல் பேசினாள் மரகத அம்மாள். 'மரகதம், கொஞ்சம் பொறு. நான் முழுவதும்.பேசு வதற்குள் நீ இப்படி அவசரப் பட்டுப் பேசுவது நன்றாக இருக் கிறதா?’ என்று சிறிது கடுமையான குரலில் சினக்குறியுடன் கேட்டார் கயிலாயம். மரகதம் அப்போதும் விடவில்லை. "நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். அவன் இனிமேல் திருந்திவிடப் போவதாக உறுதி சொல்லி விட்டாள் என்று சமாதானம் சொல்லுவீர்கள். நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/329&oldid=854456" இலிருந்து மீள்விக்கப்பட்டது