பக்கம்:மன ஊஞ்சல்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 23 இரண்டொரு மாதத்திற்கு...” என்று அவர் சொல்லி முடிக்கு முன்னாலேயே, கந்தசாமி வாத்தியார், 'அதற்கென்ன? நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இங்கேயே யிருங்கள். உங்களைப் போன்ற பெரியவர்கள் இருக்கக் கொடுத்து வைக்க வேண்டுமே!’ என்று சொன்னார். 'கந்தசாமி! நீ வெள்ளை மனதுள்ளவன். எதற்கும் சரியென்று சொல்லி விடுவாய். எதற்கும் உன் மனைவியையும் கேட்டுச் சொல்லி விடு' என்றார் பெரியவர். இதை அடுக் களையோரத்திலிருத்து கேட்டுக் கொண்டிருந்த மரகத அம்மாள், கூடத்திற்குள்ளே வந்து, அண்ணாமலைப் பண்டிதரை "நீங்கள் என் அண்ணன் மாதிரி. எத்தனை நாள் வேண்டுமானாலும் இங்கேயே இருங்கள். நீங்கள் இங்கிருந்து என்றாவது புறப்பட்டுப் போகிறேன்!” என்று சொன்னால் எங்களுக்கு வருத்தமாயிக்குமே தவிர, நீங்கள் இங்கேயேயிருக் கிறேன் என்றால் மகிழ்ச்சியே யடைவோம்' என்று சொன்னாள். விருந்தாளியாகத் தான் அந்த வீட்டுக்குள்ளே நுழைந்தார் என்றாலும், உண்மையில் அண்ணாமலைப் பண்டிதர் அடுத்த ஏழு நாட்களில் அந்தக் குடும்பத்திலேயே ஒருவர் போல் தான் ஆகிவிட்டார். அவர் விடை பெற்றுக் கொண்டு போவதாகச் சொல்லியிருந்தால் கந்தசாமி வாத்தி யாருக்கும் அவர் மனைவிக்கும் வருத்தமாகத்தான் இருந்திருக்கும். இவ்வளவுக்கும் அந்த அண்ணாமலைப் பண்டிதரால் இவர்களுக்கு ஏதாவது ஒத்தாசை உதவி உண்டா என்றால், கிடையாது என்றே சொல்ல வேண்டும். ஆனால் அவர் தினந்தோறும் புதிது புதிதாகச் சொல்கின்ற கருத்துக்கள் அவர்கள் மனத்தைக் கவர்ந்தன. அவர் சொல்லுகிற முறையில் உலகம் திருந்திவிடுமானால் இது எவ்வளவு பெரிய இன்ப உலகமாகத் திகழும் என்று தோன்றியது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/33&oldid=854457" இலிருந்து மீள்விக்கப்பட்டது