பக்கம்:மன ஊஞ்சல்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 மன வஞ்சல் வேண்டுமானால் அவனை நம்பலாம். பெற்ற மகன் என்ற பாசம் உங்களை இரக்கமும் பரிவும் காட்டச் சொல்லலாம். ஆனால், நாங்கள் அவனை நன்றாகப் புரித்து கொண்டு விட்டோம். நாய் வாலை நிமிர்த்த முடித்தால், உங்கள் மகனைத் திருத்த முடியலாம். எங்கள் தங்கத்தை இவ்வளவு நாட் கழித்துக் கடைசியாகப் படுகுழியில் தள்ள எங்களுக்கு எப்படி மனம் வரும்?' என்று பொரிந்து தள்ளினாள் மரகதம். கயிலாயம் தங்களுக்கு நன்மை செ ய்வதாகத் தொடங்கிக் கடைசியில் இப்படித் தங்கத்தின் வாழ்வைப் பாழாக்க வந்துவிட்டாரே என்றுகூட அவள் உள்ளம் குமுறியது. 'மரகதம் கொஞ்சம் வாயை மூடு, உன் அண்ணனை இவ் வளவு மோசமாக நீ நினைப்பதே தவறு. சுந்தரேசனை நான் என் மகனாக நினைத்து இருபது வருடங்களுக்கு மேலாகிறது: இப்போது நான் பேசுவது என் அருமை மகனைப்பற்றி, இறந்து போன என் மனைவி தேவநாயகியின் பிள்ளைக்குத் தான் உன் மகள் தங்கத்தைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறேன்' என்று கயிலாயம் சொன்னபோது மரகத அம்மாளால் நம்பவே முடியவில்லை. ஒன்றன்மேல் ஒன்று இன்று போதிசயமான செய்திகள் நிகழ்கின்றன என்று கந்தசாமி வாத்தியார் நினைத்துக்கொண்டார். 'ஐயா. உங்கள் மகனோடு மனைவியும் கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாக வல்லவர் கேள்விப்பட்டிருந்தோம்!' என்று கந்தசாமி வாத்தியார் கேட்டார். “கந்தசாமி, அப்படித்தான் நானும் கேள்விப்பட்டிருந் தேன். ஆனால், இப்போது அவன் உயிருடன் இருப்பதாகத் தெரிந்துகொண்டுவிட்டேன். ஆம்! என் குலத்தை விளக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/330&oldid=854458" இலிருந்து மீள்விக்கப்பட்டது