பக்கம்:மன ஊஞ்சல்.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் ஊஞ்சல் 319 வந்தவனாக - என் குடிப் பெருமையைக் காக்க வந்த பண்புடையவனாக "அந்த மகன் இருக்கிறான். சுந்தரேசன் தங்கத்தைத் தூக்கிக்கொண்டு காட்டுப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றபோது, தங்கத்தைக் காப்பாற்றியவன் அவன்தான். அவன் இப்பொழுது சென்னையில் இருக் கிறான். என் நண்பர் ஒருவர் அவனைத் தன் வீட்டில் வைத் திருக்கிறார். அவனும் தங்கமும் பலமுறை சந்தித்திருக் கிறார்கள். தங்கத்திற்கும் அவனுக்குமிடையே ஒரு பாசம் கூட வளர்ந்து வருவதாகத் தெரிந்துகொண்டேன். மன மொத்த அந்த இரண்டு பேரையும் ஒன்றுபடுத்தி மணக் கோலத்தில் காணவேண்டும் என்பதற்காகவே உங்களைக் கலந்து கொண்டு ஏற்பாடு செய்ய வந்தேன்' என்று கயிலாயம் கூறிய பொழுது அவர்கள் இருவருக்கும் வாயடைத்துப் போய்விட்டது. "ஆமாம் தங்கம் அடிக்கடி அந்தப் பையனை மருத்துவ விடுதியில் போய்ப் பார்த்து வந்தாள். மோட்டார் சைக்கிளில் அடிப்பட்டுக் காயமடைந்து மருத்துவ விடுதியில் கிடந்ததனால். அண்ணா, ராஜு தான் உங்கள் மகனா? என் னால் நம்ப முடியவில்லையே!’’ என்று மரகத அம்மாள் சொன்னாள். 1 * > "ஆமாம்மா! அவனே தான்!” என்று சொன்ன கயிலாயம் மேற்கொண்டு அவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 'அண்ணா, நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அந்தப் பையனைப் பற்றித் தங்கம் உயர்வாகத் தான் பேசினாள். அவனிடம் அன்பு தான் காட்டினாள். அவன் தான் உங்கள் மகன் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தங்கம் அவனிடம் அன்பு காட்டியது அவன் மேல் உள்ள பிரியத்தால் இருக்க முடியாது. நன்றியறிதலாலோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/331&oldid=854459" இலிருந்து மீள்விக்கப்பட்டது