பக்கம்:மன ஊஞ்சல்.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 321 'பொய்! அவனைத் தங்கம் விரும்பவேமாட்டாள். தங்கம் அவனை விரும்பாததையறிந்துதான் அவன் எங்கோ ஒடிப் போய்விட்டான்!” என்றார் முன் அண்ணாமலைப் பண்டிதராக விளங்கிய கயிலாயம். 'அப்போது அது உண்மையாக இருக்கலாம். ஆனால், இப்போது தங்கம் அவனைத்தான் விரும்புகிறான்” என்று கந்தசாமி வாத்தியார் உறுதியாகக் கூறினார். "அப்படியானால், என் மகனுக்கு உங்கள் மகளைத் தர முடியாதென்று சொல்லுகிறீர்கள்! அப்படித்தானே என்று கோபத்தோடு கேட்டார் கயிலாயம். 'அண்ணா, உங்களுக்கு நாங்கள் எப்படி மறுத்துரைக்க முடியும். ஆனால், தங்கத்தின் விருப்பத்திற்கு மாறாக அவளுக்குத் திருமணம் நடத்தி வைப்பது நல்லதா? நீங்கள் பெரியவர்கள், நீங்கள் பார்த்துச் சொன்னால் சரி’ என்றாள் மரகத அம்மாள் பணிவுடன், "மரகதம், நான் சொல்லுவதைக் கேள். தங்கத்திற்கு அடிக்கடி புத்தி மாறாட்டம் ஏற்படுகிறது. அதன் பலன் தான் இது. அவள் உண்மையில் என் மகனைத்தான் காதலிக்கிறாள் என்று நான் நன்றாகத் தெரிந்துகொண்டு தான் திருமண ஏற்பாடு தொடங்க முடிவு செய்தேன். பேசாமல் என் மகனுக்கு அவளைக் கட்டிக் கொடுக்க ஒப்புக் கொள். அவள் மேலும்மேலும் குழம்பிக் கொண்டிருக்க விடாதே. எல்லாம் நன்மையில் முடியும். இப்போது முருகேச வாத்தியாரின் மகனைத் தேடிப் பிடிப்பதென்றால் சாமான்யமல்ல. இன்னும் தங்கத்தைக் கன்னிப் பெண் ணாகவே வைத்துக்கொண்டிருப்பதும் சரியல்ல" என்று சொல்லிக்கொண்டு வந்தார் கயிலாயம். ம-21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/333&oldid=854461" இலிருந்து மீள்விக்கப்பட்டது