பக்கம்:மன ஊஞ்சல்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 மன ஊஞ்சல் கயிலாயம் எப்பொழுதும் தங்களுக்குக் கேடு செய்ய மாட்டார் என்பது அந்தத் தம்பதிகளின் நம்பிக்கை. 'அண்ணா நீங்கள் பார்த்துச் செய்தால் சரி. எதற்கும் தங்கத்தை ஒரு முறை நீங்கள் பார்த்து... என்று மரகத அம்மாள் சொல்லி வரும்போதே, "அதெல்லாம் தேவை யில்லை. அவளுக்கு வேண்டாததையா நாம் செய்யப் போகிறோம்?’ என்றார் கயிலாயம். கந்தசாமி வாத்தியாருக்கு என்ன முடிவு செய்வதென்றே புரியவில்லை. ஒருபுறம் தங்கம் - வாழவேண்டிய பெண். மறுபுறம் அருமை மைத்துனர் - தங்களை வாழவைக்க வந்தவர். இவர்களில் எவர் விருப்பத்தைத்தான் நிறை வேற்றுவது என்று அவரால் ஒரு தீர்மானத்துக்கு வர முடிய வில்லை. எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும் என்று பேசாமல் இருந்து விட்டார். அண்ணனும் தங்கையும் ஒன்றாகக் கூடித் தங்கள் பிள்ளைகளுக்கு மணம் முடித்து வைப்பதென்று பேசி முடித்துக் கொண்டார்கள். கயிலாயம் தான் திருமண ஏற்பாடுகளைக் கவனிப்ப தாகக் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கந்தசாமி வாத்தியார் மறுநாள் முருகேசரைச் சந்திக்கும் போது, அவரிடம் நடந்த விஷயத்தைக் கூறினார். முருகேச வாத்தியார் இதைக் கேட்டுப் பெருங் கவலைக் குள்ளானார். தன் வளர்ப்புப் பிள்ளையான நடராசன் வாழ முயலும் போதெல்லாம் ஏதாவது இக்கட்டு வந்து சேர்கிறதென்று அவருக்கு மனத்திற்குள் ஒர் எண்ணம் உண்டாகியது. ஆனால் அதை அவர் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. 'கந்தசாமி நாம் நினைக்கிறபடியெல்லாம் நடந்து விட்டால் உலகம் உலகமாகவேயிருக்காது. எப்படியெப்படி நடக்க வேண்டுமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/334&oldid=854462" இலிருந்து மீள்விக்கப்பட்டது