பக்கம்:மன ஊஞ்சல்.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 323 அப்படியப்படித் தான் எல்லாம் நடக்கும். இதற்காக ஆபாசப் படவேண்டாம்' என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்பவர் போல் கந்தசாமி வாத்தியாருக்குச் சமாதானம் கூறினார். மரகத அம்மாள் தங்கத்திடம், தான் செய்து வைத்திருந்த ஏற்பாட்டைக் கூறியதோடு, சென்னையில் அவள் புதிதாகக் கண்ட இளைஞன், கயிலாயத்தின் மகன் தான் என்றும் கூறினாள். தங்கத்திற்குத் தலை சுற்றியது. குழப்பமே யில்லாமல் தன் வாழ்வு கழியாது போலிருக்கிறதே என்று அவளுக்குத் தோன்றியது. தங்கத்திற்கு ராஜூவின்மேல் பிரியம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால், நடராசனைத் திருமணம் செய்து கொண்டு தியாக வாழ்வு வாழ வேண்டுமென்று அவள் உறுதி பூண்டிருந்தாள். ஆ ர ம் பத் தி ல் குலைந்துவிடும்போல் தோன்றிய அந்தஉறுதி வர வரக் கட்டுக் குலையாத தன்மையை அடைந்துவிட்டது. இனி அந்த உறுதியினின்றும் பிறழ்வதில்லை என்ற திடமான நிலையை அவள் அடைந் திருந்த போது அவள் கேட்ட இந்தத் திருமண ஏற்பாட்டுச் செய்தி அவளைத் திடுக்கிட வைத்தது. தன் அன்னையிடம் அவள் எதுவும் பதில் பேச முடியவில்லை பித்துப் பிடித்தவள் போல் தன் தாயையே பார்த்துக் கொண்டிருந்தாள். மரகத அம்மாள் தன் மகள் மனத்தில் ஒடிய எண்ணங் களை ஊடுருவிப் பார்க்கக்கூடிய சக்தியுடையவளாக இல்லாததால், தங்கமும் எதுவும் பதில் சொல்லாததால், தங்கள் ஏற்பாட்டுக்கு ஒத்து வந்துவிடுவாள் என்று எண்ணிக் கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/335&oldid=854463" இலிருந்து மீள்விக்கப்பட்டது