பக்கம்:மன ஊஞ்சல்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 மன ஊஞ்சல் தங்கம் அதிகமாகக் குழம்பிக் கொண்டிருக்கவில்லை. தன் தியாக நோக்கத்திற்குப் புறம்பாக நடக்கும் இந்த ஏற்பாட்டை நிறுத்தவும் அவளால் முடியவில்லை. கயிலாய மாமா, பணத்தைக் கொடுத்துத் தன்னை விலைக்கு வாங்கி விட்டதுபோல் நடந்து கொள்கிறார் என்றுதான் அவளுக்குத் தோன்றியது. யாரிடமும் அவள் தன் கருத்தைத் தெரிவிக்க வில்லை. இரவு நேரத்தை அவள் எதிர் பார்த்துக் கொண்டிருந் தாள். இரவு உணவுக்குப் பிறகு எல்லோரும் படுத்து விட்டார்கள். தங்கம் தன் படுக்கையில் ஒரே உறுதியான எண்ணத்தோடு சாய்ந்துகொண்டிருந்தாள். அவள் உறங்க வில்லை. நள்ளிரவு நேரம் வந்து விட்டதை வீட்டிலிருந்த கடிகாரம் பனிரெண்டு தடவை மணியடித்து அறிவித்தது. தங்கம் மெல்ல எழுந்தாள். பூனை போல் அடிமேல் அடியெடுத்து நடந்தான். கொல்லைப்புறக் கதவைத் திறந்துகொண்டு பின்புறமாக வெளியேறினாள். மல்லிகைப் பந்தல் நிழலோவியம்போல் அவள் கண்களில்பட்டது அதைப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு வீதிக்கு வந்தாள். இருளில் ஒதுங்கி யொதுங்கி நடந்து வந்தாள். ஊரைத் தாண்டி வந்தாள். ஊர்க் கோடியில், வேலியிட்ட காய்கறித் தோட்டம் ஒன்றினுள் முள் கம்பியை நீக்கிக்கொண்டு நுழைந் தாள். அங்கேயிருந்த கிணற்றின் அருகில் வந்து சேர்ந்தாள். கிணற்றை ஒருமுறை எட்டிப் பார்த்தாள். உள்ளே ஒரே பயங்கரமான கருக்கிருட்டாக இருந்தது. "தியாக வாழ்வு வாழ எண்ணினேன். ஆனால் உலகம் என்னை அப்படி வாழ விடவில்லை. இப்போது தியாகச் சாவு சாகிறேன்' என்று அவள் முடிவு கட்டிக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/336&oldid=854464" இலிருந்து மீள்விக்கப்பட்டது