பக்கம்:மன ஊஞ்சல்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 மன ஊஞ்சல் தன் தாய் தந்தையர் வருந்துவார்களே, அவர்களுக்கும் மேலாக நடராசனும் ராதாவும் மிகவும் வருந்துவார்களே என்றெல்லாம் அவள் நினைத்துப் பார்த்த பிறகுதான் சாவதென்ற முடிவுக்கு வந்தாள். ஆனால் இப்போது தான் அவளுக்குத் தன் சாவினால் ஏற்படக் கூடிய மற்றொரு விளைவு ஞாபகத்துக்கு வந்தது. தான் சாவதோ, தன்னுடைய தியாக இலட்சியம் கூட நிறை வேறவில்லையே என்று தோன்றிய மனத்துயரத்தின் காரணமாகத்தான். ஆனால், உலகத்திற்கு இதுதெரியுமா? ஊருலகம், அவள் சாவைப் பற்றி என்னென்ன மாதிரியாக இட்டுக் கட்டிக் கதை பேசும் என்ற நினைப்பு அவளுக்கு இப்போதுதான் வந்தது. தான் பருவமடைந்து பல ஆண்டுகள் திருமணமாகாமல் வீட்டிலே சும்மா யிருந்த போதே பற்பலவாறு பேசிய ஊருலகம் இப்போது தற்கொலை செய்து கொண்டதை யறிந்தபின் எப்படி யெப்படிப் பேசும் என்ற எண்ணம் அவளுக்கு அப்போது திடீரென்று உண்டாகியது. பரம்பரை பரம்பரையாகத் தன் மூதாதையரும், தாய் தந்தையரும் காப்பாற்றி வரும் அந்தக் குடிப்பெருமை தன்னால் கெட்டொழிய நேரிடும் என்ற அந்த நினைப்பு வந்தவுடன், அவள் உடலெல்லாம் நடுங்கியது. எத்தனையோ நூற்றாண்டு களாக, எத்தனையோ முன்னோர்களால், எத்தனையோ அரும்பாடுபட்டுக்காப்பாற்றப்பட்டு வருகின்ற அந்த நற்குடிப் பெருமை. தான் செய்யாத குற்றத்திற்காகக் கெட்டொழியும் படியான நிலையைத் தன்னுடைய இந்தச் செயல் உண்டாக்கி விடும் என்று எண்ணியபோதுதான் அவளுடைய சாவு உறுதி தளர்ந்தது. வீட்டுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று அவள் முடிவுக்கு வந்தபோது, யாரோ அவளைப் பின்னுக்குப் பிடித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/338&oldid=854466" இலிருந்து மீள்விக்கப்பட்டது