பக்கம்:மன ஊஞ்சல்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 327 திழுத்தார்கள். அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அந்த இருளில், தன்னைப் பிடித்திழுத்தது ஒர் ஆடவன் என்று மட்டுமே அவளால் அறிய முடிந்தது. இருளில் அந்த ஆடவன் வெறும் நிழலுவரும்போலவே தென்பட்டான். அவனை 'யார்?' என்று கேட்கக்கூட அவளுடைய உதடு களுக்கு அப்பொழுது தெம்பு வரவில்லை. ஆனால் அவன் கேட்டான், 'ஏனம்மா நீ யார்? இந்த இருளில் இங்கே என்ன செய்யவந்தாய்?" என்று. அவனுடைய குரல் முன் எங்கோ கேள்விப்பட்டிருப்பதாகத் தோன்றியது தங்கத்துக்கு. ஆனால், அது சட்டென்று சரியாகப் புரிபட வில்லை. - 'ஐயா, முதலில் என் கையை விடுங்கள்!' என்று தங்கம் சொன்னாள். அவன் உடனே அவள் யார் என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டான். 'தங்கம், நீயா? நீ தானா? நம்பமுடியவில்லையே! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்? உனக்கு என்ன துன்பம் வந்தது?’ என்று அவன் பதட்டத்துடன் கேட்டான். அப்பொழுதும் தங்கம் அவனை இன்னார் என்று நினைவு படுத்திக்கொள்ள முடியவில்லை. 'ஐயா, முதலில் என் கையைவிடுங்கள். நீங்கள் யார் என்று சொல்லுங்கள்.’’ என்று கேட்டாள் தங்கம். 'மறுபடியும் கிணற்றுக்கு ஒடுவதில்லை என்று சத்தியம் செய்தாலொழிய நான் உனக்கு எவ்விதமான பதிலும் சொல்லப் போவதில்லை’ என்றான் நிழல் வடிவாகத் தோன்றிய மனிதன். தங்கம் அவ்வாறே உறுதி செய்து கொடுத்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/339&oldid=854467" இலிருந்து மீள்விக்கப்பட்டது