பக்கம்:மன ஊஞ்சல்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மன ஊஞ்சல் அண்ணாமலைப் பண்டிதரின் கொள்கையே விந்தை யானது, அது ஒரேடியான முன்னேற்றமாகவும் இருக்காது. ஒரேயடியான பின்னேற்றமாகவும் இருக்காது, நாள்தோறும் காலையிலும் மாலையிலும் ஒரு நடராசர் உருவத்தை எதிரில் வைத்துக் கொண்டு, அதை நோக்கியபடி திருவாசகம், திருவருட்ப முதலிய பாடல்களைச் சொல்லித் தொழுகை நடந்துவார். கால்கட்டி உட்கார்ந்து கைகூப்பித் தொழுவார். அந்த உருவத்திற்குப் பூவிட மாட்டார். பூசை செய்ய மாட்டார். நீரோ பாலோ இட்டுத் தலை முழுக்காட்ட மாட்டார். மணியடித்துத் தீபமும் காட்ட மாட்டார். கேட் டால் அவை யாவும் வெளிவேடங்கள் என்பார். ஆண்டவனை வணங்கச் சிலை தேவையா என்று கேட்டால், மனத்தை ஒரு நிலைப்படுத்த அது வேண்டும் என்பார். நாள்தோறும் பேசிக் கொண்டிருக்கும் போதே சகுனம் பார்ப்பதைச் சாடுவார்: சோதிடக் குறிபார்ப்பதைக் குறை கூறுவார்: விதி என்பதாக ஒன்று கிடையாது என்பார். இப்படி அவர் புதிது புதிதாகச் சொல்கின்ற கருத்துக்கள் எல்லாம் கந்தசாமி வாத்தியாாருக்கும் மரகதத்துக்கும் சரி யான கருத்துக்களாகத் தோன்றும். இப்படி அவர்கள் வீட்டகத்திலும் மனத்தகத்திலும் இடம் பிடித்திருந்த அண்ணாமலைப் பண்டிதர் தங்கத்திடம் நடந்துகொண்ட விதம்தான் நேர்மைக்கு மாறானது. அயலாராகிய அவருக்குத் தங்கம் எவ்வளவோ பொறுமை யுடன் பணிவிடைகள் புரிந்து வந்தாள். அவருடைய அறையைக் கூட்டுவது. சாப்பாடு கொண்டு போவது, ஆடை களைத் துவைத்து உலர்த்தி மடித்துக் கொடுப்பது, மாலை வேளைகளில் அவருடன் தோட்டத்திற்கு உலாவப் போவது, இப்படிப்பட்ட வேலைகளை அவள் நாள்தோறும் அவருக் காகச் செய்து வந்தாள். அவரோ, ஏதோ குற்றேவல்காரியை நடத்துவதுபோல், அவள் வேலைகளில் ஓட்டை கூறிக் கோப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/34&oldid=854468" இலிருந்து மீள்விக்கப்பட்டது