பக்கம்:மன ஊஞ்சல்.pdf/340

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 மன ஊஞ்சல் 'தங்கம், என்னைத் தெரியவில்லையா? நான் தான் முருகேசவாத்தியார் மகன்' என்று சொன்னான் அவன். அப் பொழுதும் அவன் தங்கத்தின் கையை விட்டுவிடவில்லை. 'நடராசன். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்? என்று வியப்புடன் கேட்டள் தங்கம். 'அதை நான் பிறகு சொல்லுகிறேன். முதலில் நீ இப்படி இருட்டில் கிணற்றடி நோக்கி வந்த காரணத்தை மட்டும் சொல்’’ என்றான் நடராசன்.

  • பெரியவர்களெல்லாம் கூடி என் கருத்துக்கு விரோத மாகத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து விட்டார்கள்...' என்று தங்கம் சொல்லிக் கெண்டிருக்கும் போதே நடராசன் இடைமறித்தான்.

"தங்கம், என்னால் நம்பமுடியவில்லையே! உன் அப்பா அப்படிப் பட்டவரில்லையே!' என்றான். 'அப்பா நல்லவர்தான்; ஆனால், அந்த அண்ணாமலைப் பண்டிதர் தான் அப்பாவின் மனத்தை மாற்றிவிட்டார்” என்று தங்கம் வெறுப்புடன் கூறினாள். "யார்? உன் மாமா கயிலாயமா? அவர் உனக்கு எந்த மாப்பிள்ளையை ஏற்பாடு செய்தார்?’ என்று புரியாதவன் போல கேட்டான் நடராசன் , “பட்டணத்திலே ராஜு என்று ஒருவர் இருக்கிறார். அவர் மாமாவின் மகனாம். தன் மகனுக்குத் தான் என்னைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று அம்மாவை வற்புறுத்தி யிருக்கிறார் அவர்.” 'தங்கம் உனக்கு அந்த ராஜுவைப் பிடிக்க வில்லையா?' என்று ஒருவிதமான பதற்றத்துடன் கேட்டான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/340&oldid=854469" இலிருந்து மீள்விக்கப்பட்டது