பக்கம்:மன ஊஞ்சல்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 329. நடராசன். தங்கம் அவன் குரலில் இருந்த நடுக்கத்தைக் கவனிக்கவில்லை. அவன் கேள்விக்குத் தங்கத்திடமிருந்து எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை. "தங்கம், நீ வேறு யாரையாவது கட்டிக் கொள்ள வேண்டும் என்று நிச்சயித்திருக்கிறாயா?' என்று மறுபடியும் ஆவலும் பதற்றமும் நிறைந்த குரலில் கேட்டான் நடராசன். "ஆம்' என்று மட்டும் தங்கத்தின் உதடுகள் அசைந்தன. 'தங்கம் யார் அந்தப் புண்ணியவான்?' என்று மோதும் துடிப்புடன் கேட்டான் நடராசன். தங்கம் பதில் சொல்லவில்லை. ஆனால், திடீரென்று நடராசன் தோளில் சாய்ந்து கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள். அவள் செயல் நடராசனுக்குப் புரி வில்லை. 豫 அப்படியே அவளைத் தன்னோடு அனைத்தபடியே வழி நடத்திக்கொண்டு வந்தான். சிறிது தூரம் அவர்கள் நடந்து வந்ததும், ஓர் அரசமரத்தடியில் சின்னஞ் சிறிய அறை யொன்று மட்டுமே கட்டப்பெற்றிருந்த ஒரு பிள்ளை வார் கோயில் இருந்தது. அங்கே மினுக் மினுக்கென்று ஒரு சிறு எண்ணெய் விளக்கு எரிந்துகொண்டிருந்தது. "தங்கம், யாரைக்கட்டிக்கொள்ள எண்ணியிருக்கிறாய்?’’ என்று மீண்டும் கேட்டான் நடராசன் ஒருவேளை அவள் தன் அத்தான் சுந்தரேசன் மீதே மனம் வைத்துக் கொண் டிருக்கிறாளோ என்று அவன் எண்ணி னான் . "நடராசன், தான். உங்களைத் தான்' என்று சொல்வி மீண்டும் அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள் தங்கம். நடராசனால் நம்பவே முடியவில்லை. un -22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/341&oldid=854470" இலிருந்து மீள்விக்கப்பட்டது