பக்கம்:மன ஊஞ்சல்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 மன ஊஞ்சல் 'உண்மையாகவா தங்கம்?' என்று கேட்ட அவன் அவளைத் தன் மார்போடு சேர்த்து இறுகத் தழுவி கொண்டான். அந்த ஒரு தழுவல் அவர்களிருவரையும் வேறு நினைவின்றிச் செய்துவிட்டது. ஒருவரைப்பற்றி மற்றொருவர் கொண்டிருந்த அசூயை, வெறுப்பு, வேறுபாடு ஆகிய அத்தனை உணர்ச்சிகளும் அப்போது மறைந்து விட்டன. அந்த அணைப்பிலே தங்கம் ஏற்கனவே அவன் மீது கொண்டிருந்த அருவருப்பு குறைபாடு ஆகிய உணர்ச்சி களெல்லாம் கரைந்து மறைந்து போய்விட்டன. நடராசன் அவள் தன்னை விரும்புவாளா என்று எண்ணிக்கொண்டிருந்த சந்தேகம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டது. வியக்கத்தக்க முறையில் அவர்கள் மனம் இரண்டும் ஒன்றி விட்டது. எவ்வளவு நேரம் அவர்கள் அந்த நிலையில் இருந்தார் களோ தெரியாது. தங்கம் மீெதுவாக அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள். நடராசன், என்னை ஏற்றுக்கொள்வீர்களா?' என்று கேட்டாள். இது என்ன கேள்வி தங்கம்? எத்தனை யாண்டுகளாக உனக்காக நான் தவமிருந்தேன்?’’ என்று சொன்னான் அவன். பிள்ளையார் சிலையின் அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கை நடராசன் தூண்டிவிட்டான். வெளிச்சம் சிறிது அதிகமாகியது. "நடராசன், எப்போது உங்கள் கை வளர்ந்தது என்று கேட்டாள் தங்கம். ஆம், அவனது இடது கை முழு உருவோடு இருந்தது. அப்போது அதிலிருந்த ஊனம் மறைந்திருந்தது. "தங்கம், அது மிகச் சாதாரண விஷயம். அந்தக் கையை வேண்டும் போது சுழற்றி வைத்து விடலாம்' என்றான் நடராசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/342&oldid=854471" இலிருந்து மீள்விக்கப்பட்டது