பக்கம்:மன ஊஞ்சல்.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331 மன ஊஞ்சல் தங்கம் புரியாமல் திகைத்தாள். 'தங்கம், அது ரப்பர்க் கை. பார்வைக்கு முழுக்கை போல் தெரிவதற்காக ரப்பரினால், கைபோல் செய்து மாட்டிக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்!” என்றான் நடராசன். அதன்பிறகு தங்கம் எதுவும் பேசவில்லை. அவனையே கூர்த்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்க்கப் பார்க்க அவள் உள்ளத்தில் ஒருவிதமான இன்ப உணர்ச்சி ஊறுவது போலிருந்தது. அவன் தனக்காகவே பிறந்திருக் கிறான் என்ற உணர்வு அவள் உள்ளத்தில் இடம் பிடித்துக் கொண்டு விட்டது போலிருந்தது. சுந்தரேசன், ராஜ" போன்றவர்களைப் பற்றிய நினைவுகளே அப்போது அவளுக்குத் தோன்றவில்லை. அவனும் அவளை ஆவலோடு பார்த்துக் கொண்டுதான் இருந்தான். கடைசியில் அவன் தான் பேசினான். 'தங்கம், நேரமாகிறது. வா. உன்னை வீட்டுக்குக் கொண்டு போய் விட்டு வருகிறேன்' என்றான். "வீட்டுக்கா? நான் வரமாட்டேன்' என்றாள் தங்கம். "ஏன் தங்கம்?’’ "அங்கே அண்ணாமலைப் பண்டிதர், அவர்தான் கயிலாயமாமா இருக்கிறார். அவர் தன் மகனுக்கே என்னைக் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்து கொண் டிருக்கிறார். அங்கே போனால் நான் மீனமுடியாது!" என்றாள் தங்கம். "அப்படியானால், நீ என்ன தான் செய்யப்போகிறாய்!” என்று கேட்டான் நடராசன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/343&oldid=854472" இலிருந்து மீள்விக்கப்பட்டது