பக்கம்:மன ஊஞ்சல்.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 மன ஊஞ்சல் 'எனக்கு அவர் வீட்டுப் பணமும் வேண்டாம் மாளிகையும் வேண்டாம். நீங்கள் எங்காவது என்னைக் கூட்டிக் கொண்டு போய்விடுங்கள்’’ என்றாள் தங்கம். இதைக் கேட்டதும் நடராசன் புன்சிரிப்புக்கொண்டான். அந்தப் புன்சிரிப்பு சிறிது நேரத்தில் பெருஞ் சிரிப்பாக மாறியது. மேலும் அந்தச் சிரிப்பு வெறிச் சிரிப்பாக மாறியது. அவன் பைத்தியக்காரன்டோல் சிரித்துக்கொண்டிருந்தான்' தங்கம் பயப்படும் அளவுக்கு அவன் சிரிப்புப் பெரிதாகி விட்டது. மீண்டும் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று அவள் சந்தேகப்பட்டாள். தங்கம், அவனைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கினாள். ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள்?' என்று ஒர் அதட்டு அதட்டிாைள். நடராசன் தன் சிரிப்பைக் குறைத்துக் கொண்டான். 'தங்கம், நான் உன்னைக் கூட்டிக்கொண்டு போகிறேன். ஆனால், அதற்கு முன்னால் உன் மாமாவிடம் அனுமதி வாங்கிக்கொள்ள வேண்டும்' என்றான். 'ஏன்?' என்பதுபோல் அவள் அவனை நோக்கினாள். 'தங்கம், உனக்குத் தெரியாதா? பைத்தியமாய் இருந்த எனக்கு வைத்தியம் செய்தவர் அவர். படிப்பில்லாமல் இருந்த எனக்கு அறிவு நூல்களைக் கற்றுத் தந்தவர் அவர். காட்டுமிராண்டிபோல் இருந்த என்னை நாகரிகம் படைத்த வனாக மாற்றியவர் அவர். ஏழையாகக் கிடந்த என்னை வசதியாக வாழச் செய்தவர் அவர். அநாதையாய் வாழ்ந்த எனக்கு அரியதோர் தந்தையாக வந்து ஆட்கொண்டவர் அவர். அவருக்கு நான் துரோகம் செய்யலாமா?' என்று கேட்டான் நடராசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/344&oldid=854473" இலிருந்து மீள்விக்கப்பட்டது