பக்கம்:மன ஊஞ்சல்.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 333 "அவர் அனுமதி கொடுக்காவிட்டால் என்று செய்வது?” என்று கேட்டாள் தங்கம். "தங்கம், அவர் அனுமதி கொடுக்காமல் இருக்கவே மாட்டார். அப்படி அவர் அனுமதி கொடுக்காவிட்டாலும் அவர் முடிவுக்குக் கட்டுபட்டு நடக்க நான் கடமைப் பட்டவன்.' 'நீங்கள் கடமைப்பட்டிருக்கலாம். அதற்காக நான் ஏன் அவருக்குக் கட்டுபட்டு நடக்க வேண்டும்' என்றாள் தங்கம். 'தங்கம், நீயும் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கடமை பட்டவள்தான். உனக்கு அவர் எவ்வளவு நன்மைகள் செய்திருக்கிறார்?" என்று கேட்டான் நடராசன். ‘நன்மைகளா? எல்லாம் சூழ்ச்சி, தன் பணத்தால் என்னை விலைக்கு வாங்கி விட்டதாக நினைத்துக் கொண் டிருக்கிறார் அவர். சின்னஞ்சிறிய பூச்சி புழுக்கள் கூடத் தன் தன் உணர்ச்சியோடு உரிமையாக வாழுகின்றன. ஒரு பெண்ணின் உணர்ச்சிகளை மதிக்காமல் நடந்து கொள்கிற இவருக்கு நான் ஏன் கட்டுப்படவேண்டும்? தங்கம் ஆத்திரத் தோடு பேசினாள். 'தங்கம், நீ உன் மாமாவைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் பேசுகிறாய்!” என்றான் நடராசன். “புரிந்துகொண்டு பேசுகிறேனோ புரியாமல் தான் பேசுகிறேனோ! நான் கடைசியாக உங்களையொன்று கேட்கிறேன். என் வாழ்வில் நான் உங்களைத் தவிர வேறு யாரையும் மனத்தாலும் நினைக்கமாட்டேன்; நீங்கள் இப்போதே என்னை எங்காவது கூட்டிக் கொண்டு போய்விடுங்கள். இல்லாவிட்டால், அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/345&oldid=854474" இலிருந்து மீள்விக்கப்பட்டது