பக்கம்:மன ஊஞ்சல்.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 மன ஊஞ்சல் உங்களுக்கு உறுதியில்லையென்றால் பேசாமல் என்னை விட்டு விட்டுப் போங்கள்' என்று தீர்மானமான குரலில் சொன்னாள் தங்கம். 'தங்கம் மனத்தை வீணாக அவட்டிக் கொள்ளாதே! அண்ணாமலைப் பண்டிதர் நம் இருவருடைய உணர்ச்சிக்கும் விரோதமாக நடந்துகொள்ளவே மாட்டார். வா, உன்னை யாருக்கும் தெரியாமல் வீட்டில் கொண்டு போய் விடுகிறேன். நீ தற்கொலை செய்து கொள்ள முயன்றது வேறு தெரிந்தால் அவமானம். எப்படியும் நானே உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன். நம்பிக்கையோடிரு' என்று உறுதி சொன்னான் நடராசன். அதன்பிறகு தான் தங்கம் அவனுடன் திரும்பினாள். வீட்டுவாசலில் அவளை விட்டு விட்டு அவன் போய்விட்டான், கொல்லைப்புற வழியாக அவள் உள்ளே நுழைந்து யாரும் கவனியாமல் தன் படுக்கைக்குத் திரும்பிப் போய் விட்டாள். படுக்கையில் சாய்ந்த பிறகுதான், நடராசன் தன்னைஎப்படித் தொடர்ந்து வந்தான் என்ற விஷயத்தைக் கடைசிவரை சொல்லாமல் மறைத்து விட்டான் என்பது அவளுக்கு நினைவு வந்தது. தானும் அதை மீண்டும் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் விட்டு விட்டதற்காக சலித்துக் கொண்டாள். இப்போது அவள் மனம் பூரணமாக அவன் மீது பாசம் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/346&oldid=854475" இலிருந்து மீள்விக்கப்பட்டது