பக்கம்:மன ஊஞ்சல்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[ዐ6ÜT ஊஞ்சல் 33. இன்பப் பெரு வெள்ளம் தங்கம் இரவில் வெளிக் கிளம்பிச் சென்றதும் தற்கொலை செய்ய முயன்றதும், வீட்டுக்குத் திரும்பிவந்ததும் யாருக்கும் தெரியாது. வீட்டில் அவளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இல்லாதது போல் காரியங்கள் நடந்து கொண்டிருந்தன அண்ணாமலைப் பண்டிதராகிய கயிலாய மாமா; தங்கத்தின் திருமணத்திற்குத் தானே ஒரு நாள் குறித்தார். அவரே முன்னின்று திருமணத்திற்கு ஆக வேண்டிய காரியங்களை யெல்லாம் கவனித்தார். திருமணத்தை எங்கே நடத்துவது என்ற பிரச்சினை வந்தபோது கயிலாயம், கதலிப் பட்டணத்தில் ஜமீந்தார் மாளிகையிலேயே நடத்தலாம் என்று சொன்னார். ஆனால், தான் வாழ்க்கைப்பட்ட வீட்டில்தான் தன் அருமை மகளுக்குத்திருமணத்தை நடத்திக் கண்குளிரப் பார்க்க வேண்டும் என்பது மரகத அம்மாளின் ஆசை. ஆகவே, கயிலாயம் தன் தங்கையின் எண்ணத்திற்கு இசைய வேண்டியதாயிருந்தது. நெய்யூரிலே யிருந்த அந்தக் கந்தசாமி வாத்தியாரின் சின்னஞ்சிறிய வீட்டிலே நாளுக்குநாள் புதுப்பொலிவு தோன்றிக் கொண்டிருந்தது. வீடு முழுவதும் வெள்ளை யடித்துப் புத்தம் புதிய அலங்காரங்கள் பல செய்யப்பட்டன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/347&oldid=854476" இலிருந்து மீள்விக்கப்பட்டது