பக்கம்:மன ஊஞ்சல்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 மள ஊஞ்சல் இத்தனை ஏற்பாடுகளையும் கண்டு மனம் புழுங்கிக் கொண்டு வெளியே சொல்ல முடியாமல் மனத்துக்குள்ளே வேதனைப் பட்டுக் கொண்டிருந்த இதயம் ஒன்று இருந்தது என்றால், அது தங்கமாகத் தான் இருக்கும் என்று நாம் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், இந்த ஏற்பாடுகள் இன்னொரு பெண்ணுக்கு மனவருத்தம் அளிக்கக்கூடியவையாக இருந்தன. அந்தப் பெண் வேறு யாருமில்லை. அது தங்கத்தின் அருமைத் தோழி ராதா தான். தங்கத்திற்குத் தன்னால் காதலிக்கப் பட்டவனும், தன் அன்புள்ளத்தில் என்றென்றும் குடியிருந்து வருபவனும் ஆகிய நடராசனைத் திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்டிருந்த ராதா, இந்த ஏற்பாடுகளைக் கண்டு தன் எண்ணம் சித்திக்காதநிலை ஏற்பட்டதற்காக வருந்திக் கொண்டிருந்தாள் ஆனால், அவள் தன் வருத்தத்தை வெளியில் யாரிடமும் சொல்ல வில்லை. தங்கத்திடம் கூடச் சொல்லவில்லை. எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும் என்று மனத்தை அமைதிப்படுத்திக் கொண்டு அவள் பேசாமல் இருந்தாள். நடராசன் அந்த நள்ளிரவில் சொன்ன உறுதி மொழியில் தங்கத்திற்கு ஒரளவு நம்பிக்கை. ஆகையால், அவள் அடிக்கடி தன் மனத்தைச் சமாதானப்படுத்திக்கொண்டாள். தன் மகள் முகத்தில் செழிப்பில்லாததை மரகத அம்மாள் கவனிக்கத் தவறவேயில்லை. அவள் மெதுவாக ஒருமுறை தன் கணவரை யணுகி, ‘'என்னங்க தங்கத்தைப் பார்க்கப் பரிதாபமாயிருக்கிறதே?' என்று கேட்டாள். அதற்குக் கந்தசாமி வாத்தியார் தாமும் வருத்தத்துடன் பதிலளித்தார். ' என்ன செய்வது? உன் அண்ணன் சொல்லை யும் மீறமுடியவில்லை என் மகள் நிலையையும் பொறுக்க முடியவில்லை' என்று கந்தசாமி வாத்தியார் ஈனக்குரலில் கூறியபோது மரகத அம்மாளுக்கு மனத்தில் சுருக்கென்று முள் தைத்தது போலிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/348&oldid=854477" இலிருந்து மீள்விக்கப்பட்டது