பக்கம்:மன ஊஞ்சல்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம ைஊஞ்சல் 337 குறிப்பாகக்கூடத் தன் மனம் வருந்தும்படி இதுவரை தன் அருமைக் கணவர் பேசி அவள் கண்டதேயில்லை. இன்று உன் அண்ணன், என் மகள் என்று அவர் தம்மையும் தன்னையும் பிரித்துப் பேசுவதை அவளால் கேட்டுக்கொண்டு சும்மாயிருக்க முடியவில்லை. கலங்கிய கண்களுடன், குமுறும் உள்ளத்துடன் அவள் அவரிருந்த இடத்தைவிட்டுப் போவதற் காகச் சட்டென்று திரும்பினாள். அப்போது அவர்கள் இருந்த கூடத்திற்குள் கயிலாயம் திடீரென்று நுழைந்தார். தன் தங்கை மரகதத்தின் முகத்தைக் கண்ட கயிலாயம், அவள் ஏதோ மனவேதனையுடன் இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ளத் தவறவில்லை. தன் மைத்துனர் நிலையும் அவளைக் காட்டிலும் சிறந்ததாக இல்லை என்பதையும் அவர் கவனிக்கத் தவறவில்லை. “கந்தசாமி உங்களுக்குள் என்ன மனவருத்தம்?’ என்று கேட்டார் கயிலாயம். பதில் இல்லை. "மரகதம், உங்களுக்குள் என்ன சச்சரவு' என்று மறு படியும் கேட்டார் கயிலாயம். அதற்கும் பதிலில்லை. 'கணவன் மனைவி விகாரத்திடையே மூன்றாவது மனிதன் ஒருவன் தலையிடுவது என்றும் தகுதியுடையதல்ல' என்று தமக்குத் தாமே சொல்லிக்கொண்டு கயிலாயம் அந்தக் கூடத்தைவிட்டு வெளிச் செல்லுவதற்காகத் திரும்பினார். "அண்ணா! அண்ணா!' என்று மரகதம் கூவி பழைத்தாள். கயிலாயம் சட்டென்று அங்கே நின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/349&oldid=854478" இலிருந்து மீள்விக்கப்பட்டது