பக்கம்:மன ஊஞ்சல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 25 மாகக் கடிந்து கொள்வார். அவர் எவ்வளவுதான் கடிந்து கொண்ட போதிலும் தங்கம் சிறிதேனும் முகம் கோணிய தில்லை. அப்பா அம்மாவிடம் குறை சொன்னதுமில்லை. இப்படியாக இரண்டு மாதம் அங்கு தங்கியிருந்த அண்ணாமலைப் பண்டிதர் கடைசியில் ஒருநாள் தான் போகப் போவதாகச் சொன்னார். இவ்வளவு தூரம் குடும்பத்தில் ஒருவராகப் பழகிய அவரைப் பிரியக் கந்தசாமி வாத்தி யாருக்குச் சிறிது கூட மனமில்லை. ‘எங்கள் மேல் உங்களுக்கு என்ன கோபம்? எங்களில் யாரேனும் தவறுதலாக நடந்துகொண்டிருந்தால் சொல் லுங்கள். திருந்திக்கொள்கிறோம். ஆனால் எங்களைவிட்டுப் போவதாகச் சொல்லாதீர்கள். நீங்கள் போய்விட்டால் இத்த வீட்டில் ஒளி குறைந்துவிடும்!' என்று வேண்டிக் கொண்டார் கந்தசாமி வாத்தியார். "சரி. நீங்கள் சொல்வதற்காக வேண்டுமானால் இன்னும் ஒரு வாரம் இருக்கின்றேன்' என்று சொன்ன பண்டிதர் அந்த ஒரு வாரம் முடிந்த பிறகு போவதாகச் சொல்லவில்லை; அந்த ஒரு வாரத்திற்கிடையே நடந்த நிகழ்ச்சிகள் அவர் முடிவை மாற்றிக் கொள்ளச் செய்துவிட்டன. காரணம் என்னவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/35&oldid=854479" இலிருந்து மீள்விக்கப்பட்டது