பக்கம்:மன ஊஞ்சல்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 மன ஊஞ்சல் "மரகதம்!’ என்று பாசம் இழைத்தோடும் மெல்லிய ஒசை அவரிடமிருந்து எழுந்தது. "அண்ணா! இந்தத் திருமணம் வேண்டாம் அண்ணா!' என்று மரகத அம்மாள் கதறினாள். 'அசடே! இன்னொருமுறை அப்படிச் சொல்லாதே. கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த ஒரு மகளுக்கு மங்கல காரியமாக நடக்கப்போகும் திருமணத்தை எண்ணி மகிழ்ந்து வாழ்த்த வேண்டிய நீயா இப்படிப் பேசுவது? தன் மகளடைய விருக்கும் ஒரு நன்மையைத் தாயே தடுப்பதா?’ என்று கூறினார் கயிலாயம். அவர் சொற்களில் எப்போதும் இருக்கக் கூடிய உறுதியான பாணி அப்போதும் இருந்தது. 'அண்ணா, என் மகள் வாழ்நாள் முழுவதும் மனங் கலங்கிக்கொண்டிருக்கச் செய்யும் இந்தத் திருமணம் எப்படி யண்ணா மங்கல காரியமாகும்?' என்று உருக்கத்துடன் கேட்டாள் மரகத அம்மாள். இந்தச் சமயம் தங்கம் அந்தக் கூடத்திற்குள்ளே எதற் காகவோ நுழைய அடியெடுத்து வைத்தாள். ஆனால், தன்தாயும் தந்தையும் இருந்த சோக நிலையைக் கண்டதும் அவள் பின்வாங்கி அடுத்த அறையிலேயே நின்று விட்டான். அண்ணாமலைப் பண்டிதர் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு கூடத்தின் உட்புறமாகத் திரும்பியிருந்த படியால், தங்கம் அங்கு நுழைந்ததையோ, அடுத்த அறையில் நின்று கொண்டிருந்ததையோ கவனிக்கவில்லை. "மரகதம், நீ சிறிதும் புரியாமல் பேசுகிறாய். நீ உறுதியாக நம்பு. உண்மையில் நான் உன் தங்கத்திற்கு நன்மை தான் செய்கிறேன். அவள் யாரை ஆசையோடு நேசிக்கிறாளோ அவனுடன் தான் அவளை இணைத்து வைக்க நான் ஏற்பாடு செய்கிறேன்' என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/350&oldid=854480" இலிருந்து மீள்விக்கப்பட்டது