பக்கம்:மன ஊஞ்சல்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 339 'இல்லை, உங்கள் ஏற்பாடு எனக்குப் பிடிக்கவில்லை’ என்று அவர் எதிரில் ஒடிச் சொல்ல வேண்டும் போலிருந்தது தங்கத்துக்கு. ஆனால், அவன் உடல் அசையவில்லை; குரலும் வெளிப்படவில்லை. "தான் நடராசனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று தங்கம் தெளிவாகச் சொல்லி விட்டாள். அவள் இன்பமாக வாழவேண்டுமென்றால், அவள் எண்ணப் படி மணமுடித்து வைத்தால் தான் நல்லது. அதுதான் அவள் வாழ்வில் கலங்காமல் களிப்போடு இருக்க நாம் வழி செய்து கொடுப்பதாக இருக்கும். அவள் மறுக்கின்ற மாப்பிள்ளையைக் கொண்டு வந்து மணமுடித்து வைத்து அவள் இவனைத்தான் நேசிக்கிறாள் என்று தான் சொல்லிக் கொண்டிருந்தால் அது எப்படிப் பொருந்தும்; என்று கந்த சாமி வாத்தியார் துயரங் கலந்த சினத்தோடு பேசினார். கயிலாயத்தின் எதிரில் அவர் இதுவரை கடுகடுப்பாகப் பேசியதே கிடையாது. கயிலாயத்தை அவர் ஒரு மகான் என்று மதித்திருந்தார். ஆனால், தன் மகள் திருமண விஷயத்தில் மைத்துனர் கயிலாயம் காட்டும் பிடிவாதத்தை அவரால் பொறுத்துக் கொண்டிருக்க முடியவில்லை. கந்தசாமி வாத்தியாரின் கோபமான பேச்சுக்கள் சயிலா யத்திற்குச் சிரிப்பைத் தான் வரவழைத்தன. அதுவும் வெறும் புன் சிசிப்பாகத்தான் வந்தது. “கந்தசாமி, மரகதம், நான் உங்களை மிகவும் மனம் நோகச்செய்துவிட்டேன். உங்கள் விருப்பப்படி நடராசனைத் தங்கம் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழட்டும். அதுவும் எனக்கு மகிழ்ச்சியையே தரும்.’’ என்றார் கயிலாயம். "அண்ணா, முழுமனத்தோடுதான்சொல்லுகிறீர்களா?” என்று தன் ஆனந்தந்தை இடைமறித்த சந்தேகத்தோடு கேட்டாள் மரகதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/351&oldid=854481" இலிருந்து மீள்விக்கப்பட்டது