பக்கம்:மன ஊஞ்சல்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 மன ஊஞ்சல் கந்தசாமி வாத்தியாரும் தன் மைத்துனர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். “கந்தசாமி, மரகதம், உங்கள் மனப்போக்கை நான் இப்போதுதான் புரிந்து கொண்டேன் என்பதில்லை. முதலிலேயே தெரிந்துகொண்டுவிட்டேன். கடைசியில் உங்கள் எண்ணப்படியே திருமணத்தை நடத்திவிடுவதென்று நானே முடிவு செய்துவிட்டேன். இதோ நீங்கள் எதிர் பார்த்தபடியே திருமண அழைப்பிதழும் அச்சடித்துக் கொண்டுவந்து வீட்டேன்' என்று சொல்லித் தாம் கையில் கொண்டு வந்திருந்த ஒரு கட்டைப் பிரித்து அவர்கள் இருவர் கையிலும் ஆளுக்கோர் அழைப்பிதழ் கொடுத்தார். அந்த அழைப்பிதழைப் பார்த்த உடனே அவர்கள் கண்கள் வியப்பால் விரிந்தன. கொட்டை எழுத்துக்களில் நடராசனுக்கும் தங்கத்துக்கும் என்று இருந்ததைப் பார்த்தவுடன் அவர்கள் கொண்ட ஆனந்த உணர்ச்சி அளவிடற்கரியதாயிருந்தது. ஆனால், அழைப்பிதழை வரி வரியாகப் படித்தபோதுதான், வியப்புணர்ச்சி மேலோங்கியது. அண்ணாமலைப் பண்டிதர் என்ற கயிலாயத்தின் மகன் திருவளர் செல்வன் நடராசனுக்கும். நெய்யூர் கந்தசாமி வாத்தியாரின் மகள் திருவளர் செல்வி தங்கத்துக்கும் என்று இருந்த அந்தச் சொற்றொடர் கந்தசாமி வாத்தியாரையும், மரகத அம்மாளையும் பெருத்த ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. 'அண்ணா, நடராசன் உங்கள் மகனா?' என்று கூவினாள் மரகத அம்மாள். "உண்மைதானா?” என்று கேட்டார் கந்தசாமி வாத்தியார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/352&oldid=854482" இலிருந்து மீள்விக்கப்பட்டது