பக்கம்:மன ஊஞ்சல்.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 341 . 'உண்மை இது மட்டுமல்ல, தொடக்க முதலே நான் என் மகன் நடராசனுக்குத்தான் உங்கள் தங்கத்தைத் திருமணம் செய்துவைக்கச் சொல்லிவருகிறேன்' என்றார் கபிலாயம். "நீங்கள் சொல்வது புரியவில்லையே?’ என்று கேட்டார் கந்தசாமி.

  • ராஜூவுக்குத் தங்கத்தைக் கொடுங்கள் என்று கேட்டேன் நான். நீங்கள் மறுத்துவிட்டீர்கள். நடராசனைத் தான் தங்கம்மணம்புரிய விரும்புகிறாள் என்று சொன்னிர்கள். நடராசனும் ராஜூவும் ஒருவரே தான்என்பது தெரியாததால் நீங்களும், தங்கமும் என்மேல் வெறுப்புக்கொள்ளும்படி ஆகி விட்டது. இதில் நானும் ஒரு வகையில் ஏமாந்து போயிருக் கிறேன். நடராசன் மேல் தங்கம் முதலில் வெறுப்புக் கொண் டிருந்தாள். ஆகையால் அவள் அன்பைக் கவருவதற்காக அவன் ராஜுவாக வேடம் போட்டான். தங்கமும், ராஜுவை விரும்பினாள். அவள் ராஜூவிடம் வெறுப்புக்கொள்ளும் படியும், நடராசனிடம் அன்புகொள்ளும்படியும் எப்படி மாறுதல் ஏற்பட்டது என்பதுதான் எனக்கு புரியவில்லை." என்றார் கயிலாயம்.

மைத்துேைர, நீங்கள்தான் இரட்டைவேடம் போட்டீர் களென்றால், உங்கள் மகனும் இரட்டைவேடம் போட்டிருக் கிறான். நடராசன்தான் உங்கள் மகன் என்று எப்போது எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? என்று சொல்லவில்லையே!” என்று கேட்டார் கந்தசாமி வாத்தியார், "கந்தசாமி, எனக்கு உயிருக்குயிரான ஒரு மனைவி கிடைத்திருந்தும் நான் அவளை அலட்சியப்படுத்தி குண்வதி அழகில் மயங்கி அவளை இரண்டாந்தாரமாகக் கட்டிக் கொண்டேன் அல்லவா! இந்தக் குணவதி பெயரளவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/353&oldid=854483" இலிருந்து மீள்விக்கப்பட்டது