பக்கம்:மன ஊஞ்சல்.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 மன ஊஞ்சல் குணவதியே தவிர, மிகுந்த குணக்கேடியாக இருந்தாள். ஒரு நாள், இவள் செய்து வைத்திருந்த வடையை என் மூத்தாள் மகன் ராஜூ எடுத்துத் தின்றுவிட்டான் என்பதற்காக அவன் கையை அப்படியே அரிவாளால் துண்டாக வெட்டிவிட்டாள். இது ஊராருக்குத் தெரியாது. இந்தக் கொடுமையும் பொறுத்துக் கொண்டு இருந்த என் மூத்தாள் கற்பகத்தின் பேரில் குணவதி பழி கிளப்பி விட்டாள். ராஜ ராஜு என்று தான் அன்போடு பாராட்டி வளர்த்து வந்த இந்தக் குழந்தையை அவள் மானமிழந்து பெற்றதாக ஊருக்குள் பேச்சுக் கிளப்பி விட்டாள். குணவதி சிற்றத்திற்கு அஞ்சி நான் கற்பகத்திடம் வெறுப்பாக நடப்ப தாகக் காட்டிக் கொண்டேனே தவிர, உண்மையில் அவளிடம் அன்பும் இரகசியத்தொடர்பும் வைத்திருந்தேன். இதை வெளிப்படையாகக் கூறி என் மனைவியைக் காப்பாற்றும் வன்மையில்லாத கோழையாக அப்போது தான் இருந்தேன். கற்பகமோ, மானம் பொறுக்க முடியாமல் தன் அருமைக் குழந்தையுடன் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள். கிணற்றில் விழுந்து அவள் இறந்து விட்ட போதிலும், இந்தக் குழந்தை வெளிப்படுத்தப் பட்ட போது பிழைத்துக் கொண்டு விட்டது. பிழைத்துக் கொண்ட இந்தக் குழந்தையைத்தான் முருகேச வாத்தியார் வளர்த்து வந்திருக் கிறார். அவர் அவனுக்கு நடராசன் என்று பெயர் வைத்து வளர்த்திருக்கிறார். கிணற்றில் விழும்போது மண்டையில் அடிபட்டதால் அதிர்ச்சியடைந்து அவன் மூளையில் தாக்கிய தால் அவன் பைத்தியமாக வளர்ந்திருக்கிறான் அவனுடைய வரலாற்றை முருகேச வாத்தியார் கூறிய பிறகு அவன் என் மகன்தான் என்று தெரிந்து கொண்டேன். அதனால் தான் நான் அவனை மருத்துவ விடுதி அழைத்துச் சென்று ஒளி மருத்துவம் புரியும்படி ஏற்பாடு செய்தேன். உங்களுக்கோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/354&oldid=854484" இலிருந்து மீள்விக்கப்பட்டது