பக்கம்:மன ஊஞ்சல்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 343 நான் அவனுக்குக் கல்வி போதிப்பது போல் நடிப்புக் காட்டி னேன். நான் இங்கு வந்ததுமே, குணவதி எப்படியோ என்னைப் பற்றிக் கேள்விப்பட்டுத் தன் மகன் சுந்தரேசனை அனுப்பி என்னை உளவறிந்து வரச் செய்திருக்கிறாள். அவன் என்னை மட்டுமல்ல, நடராசனையும் இன்னார் என்று தெரிந்து கொண்டு விட்டான். அவனுக்கு வந்த இரண்டு கடிதங்கள் மூலமாகவும் என் திருவாசகப் புத்தகம் திருட்டுப் போனதன்மூலமாகவும், நான் அவன் என்னைப் புரிந்து கொண்டுவிட்டான் என்பதையும், அவன் ஒழுக்கமற்றவன் என்பதையும் தெரிந்து கொண்டேன். அவனை மறைமுக மாகத் திருத்த முயன்று தோல்வியடைந்தேன். நடராசன் தங்கத்தை விரும்பினான். தங்கமோ சுந்தரேசன்மீது மோகம் கொண்டிருந்தாள் . இதையும் நான் அறிந்துகொண்டேன். சுந்தரேசன் விஷயம் தானாக நடந்தது. நடராசனுக்காக நான் பெருமுயற்சி எடுத்துக் கொண்டேன். அவனைப் பட்டணத்து இளைஞனாக மாற்றி னேன். கையூனம் இல்லாதவனாகத் தோற்றமளிக்கச் செய்தேன். தங்கம், அவனோடு பழகும் படியான சூழ் நிலையை உருவாக்கினேன். தங்கமும், அவன்மீது ஆசை கொண்டாள். என் எண்ணம் இந்த முறையில் நிறைவேறி விட்டது என்று மனமகிழ்ந்தேன். ஆனால், அவள் மறு படியும், புதிய ராஜுவைவிட்டு பழைய நடராசன் பக்கம் எப்படித் திரும்பினாள் என்பது தான் எனக்கு மர்மமாக இருக்கிறது.’’ என்றார் கயிலாயம். 'மர்ம மனிதர்களுக்கும் விளங்காத மர்மங்கள் உலகில் இருக்கின்றன’’ என்று, கந்தசாமி வாத்தியார் புன்சிரிப்புடன் கூறினார். 'அப்புறம்...?' என்று கேட்டாள் மரகத அம்மாள் தன் அண்ணனை நோக்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/355&oldid=854485" இலிருந்து மீள்விக்கப்பட்டது