பக்கம்:மன ஊஞ்சல்.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 மன ஊஞ்சல், "அப்புறம் எல்லாவற்றையும் நீயே யூகித்துக்கொள். ராஜூவாக இருந்தாலும் சரி, நடராசனாக இருந்தாலும் சரி, தங்கம் என் மகனைக் கட்டிக் கொள்ளச் சம்மதித்து விட்டாள். அது போதும் எனக்கு!" என்று சொல்வி விட்டு வெளியே வந்தார் அண்ணாமலைப் பண்டிதர். அவரைப் பின்தொடர்ந்து கந்தசாமி வாத்தியாரும் மரகத அம்மாளும் வந்தார்கள். கூடத்தை யடுத்த அறையில் சுவரில் சாய்ந்து கொண்டிருந்த தங்கத்தைக்கண்டதும்,'நீயும்இரகசியத்தைத் தெரிந்து கொண்டுவிட்டாயா?' என்றுகேட்டார் கயிலாபம், தங்கம் பதில் சொல்லவில்லை. அவள் கண்களில் அசாதாரணமான ஓர் ஒளி வெளிப் பட்டுத் தெரிந்தது. அவள் முகம் விரிந்த மல்லிகைப் பூவைப் போல் மலர்ந்திருந்தது. அந்தரத்திலே தெரியும் இன்பக் காட்சி யொன்றைப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் அவள் மேலே நோக்கிக் கொண்டிருந்தாள். அவள் உதடுகள் புன் சிரிப்புடன் மின்னிக்கொண்டிருந்தன. வீட்டுக் கொல்லைப் புறத்திலே இருந்த அந்த மல்லிகைப் பந்தலும், அதனடியில் முதன் முதலாக அவள் கண்ட நடராசனுடைய அந்தக் கவர்ச்சியான முகமும் அவள் மனக்கண்முன் தோன்றின. அந்த இனிய காட்சியைக் கண்டவாறே அவள் தன்னை மறந்த நிலையில், இன்பப் பெரு வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தாள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/356&oldid=854486" இலிருந்து மீள்விக்கப்பட்டது