பக்கம்:மன ஊஞ்சல்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ከዐርU ஊஞ்சல் 4. ஒற்றைக் கையும் உழைத்துப்போடும் தங்கம் மல்லிகை மொட்டுக்களைப் பறித்துக் கொண் டிருந்தாள். நாள்தோறும் புதிது புதிதாக அரும்புகின்ற அந்த மொட்டுக்களைப் பறித்துச் சென்று அவளும் அவள் தாயும் கோத்துக் கட்டிக் கூந்தவில்வைத்துக் கொள்வார்கள். அதுதான் அவர்கள் செய்து கொள்ளும் அழகு, அலங்காரம் எல்லாம். - அண்ணாந்து அண்ணாந்து எங்கெங்கே அரும்புகள் இருக்கின்றன என்று எவ்வி எவ்விப் பறித்துக் கொண்டிருந்த போது அவளைப் பார்ப்பதற்கே ஒர் அழகாக இருந்தது. அழகான மான்குட்டியொன்று ஓடாமல் நின்ற இடத்திலேயே துள்ளித் துள்ளிக் குதித்துக் கொண்டிருப்பது போவிருந்தது. அப்படி அவள் துள்ளிக் குதித்தபோதெல்லாம் மாலைச் செம்மை கலந்த வெய்யிலிலே அவளுடைய அழகிய அங்கங் கள் ஒவ்வொன்றும் குலுங்கிக் குலுங்கி ஒய்யார அழகு காட்டி மின்னிக் கொண்டிருந்தன; இப்படித்தன்னை மறந்து அரும்பு சேர்ப்பதே குறிக்கோளாக இருந்த தங்கத்தின் தோளை யாரோ தொடுவது போல் அவள் உணர்ந்தாள். உடனே திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். நின்ற ஆளைக் கண்டதும் அவள் திகில் அதிகரித்தது. ஒற்றைக் கையன் நடராசன்-முருகேச வாத்தியாரின் மகன் நடராசன்-அவளைப் பார்த்துக் குறுநகை புரிந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/36&oldid=854488" இலிருந்து மீள்விக்கப்பட்டது